தமிழக வேளாண் பட்ஜெட்டில் சிறுதானிய மண்டலங்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்றுள்ள விவசாயிகள், நியூஸ் 18 செய்தியை தொடர்ந்து சூரியகாந்தி, நிலக்கடலை உற்பத்தியை அ
.திகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண்பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளது மட்டுமின்றி நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு நன்றியும் தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக வேளாண் பட்ஜெட்டில் சிறு தாணிய மண்டலங்கள் அமைக்கப்படும், சூரியகாந்தி, நிலக்கடலை உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் போன்ற அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
இது குறித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கரிசல்பூமி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வரதராஜன் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், தமிழகத்தில் 20 மாவட்டங்களில் சிறுதானிய மண்டலங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்க கூடியது என்றும், அதே போன்று நீர்வடி மேம்பாட்டு திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது மூலமாக பல்வேறு பயன்களை அடைய முடியும்.
நீர்வள ஆதாரம் பெருகி வேளாண்மைக்கு உதவும். கடந்த ஆண்டுகளில் சூரியகாந்தி, நிலக்கடலை விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இது குறித்த செய்தி நியூஸ் 18ல் எடுத்துரைக்கப்பட்ட நிலையில் வேளாண்பட்ஜெட்டில் சூரியகாந்தி, நிலக்கடலை உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அரசுக்கும், செய்தி வெளியிட்ட நியூஸ் 18 தொலைக்காட்சிக்கும் தங்களது நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: SBI வங்கியில்‘நான் உங்களுக்கு உதவலாமா’என்ற புதிய திட்டம் துவக்கம்
ட்ரோன் மூலமாக பூச்சி மருந்து தெளிக்க பயிற்சி அளிக்கப்படும் என்று கூறி இருப்பது வரவேற்க கூடியாது என்றாலும், ட்ரோன் வாங்க மானியம் வழங்க வேண்டும், பட்ஜெட்டில் காவிரி டெல்டா பகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மானாவரி பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்ற உணர்வு இருப்பதாகவும் தெரிவித்தார்.

வரதராஜன் - கரிசல்பூமி விவசாயிகள் சங்கத்தின் தலைவர்
மேலும், தர்ப்பாய்கள் வாங்க நிதி ஒதுக்கீடு வரவேற்க கூடியாது. ஆனால் அதில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும், இயற்கை விவசாயத்திற்கு அரசு மானியம் என்று அறிவித்து இருந்தாலும், அது பணமாக கிடைப்பது இல்லை, இடு பொருட்களாக வழங்குவதால் தங்களுக்கு பயன் இல்லை என்றும், கடந்த ஆண்டு உர தட்டுப்பாடு இருந்ததாகவும், இனி வரும் காலங்களில் உரங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
நிலக்கடலை விவசாயம் பாதிப்பு குறித்து ஜனவரி 27ம் தேதியும், சூரியகாந்தி விவசாயம் பாதிப்பு குறித்து பிப்ரவரி 6ம் தேதி நியூஸ் 18 தொலைக்காட்சியில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது குறிப்பிட தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.