Home /News /tamil-nadu /

'பயிர்காப்பீட்டு தொகை வழங்குக' வாயில் கருப்புத்துணி கட்டி விவசாயிகள் போராட்டம்

'பயிர்காப்பீட்டு தொகை வழங்குக' வாயில் கருப்புத்துணி கட்டி விவசாயிகள் போராட்டம்

 விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் போராட்டம்

Thoothukudi District : விவசாயிகள் தற்காலிகமாக போராட்டத்தினை ஒத்தி வைப்பதாகவும், பயிர்காப்பீட்டு தொகை வரவு வைக்கப்படவில்லை என்றால் மிகப்பெரிய அளிவில் போராட்டத் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள பயிர்காப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி வாயில் கருப்புத்துணி கட்டி விவசாயிகள் எட்டயபுரம் தாலூகா அலுவலகத்தினை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள எட்டயபுரம் தாலூகாவிற்குட்பட்ட படர்ந்தபுளி குறுவட்டத்தில் உள்ள கிராமங்களில் இருக்கும் விவசாயிகளுக்கு 2020-21ம் ஆண்டிற்காக பயிர்காப்பீட்டு தொகை தற்பொழுது வரை வழங்கப்படமால் இருப்பதை கண்டித்தும், மக்காச்சோள பயிர்களுக்கு சரிவர தொகை வழங்கப்படமால் இருப்பதாகவும்,  மேலும் 2019- 20ம் ஆண்டிற்கான காப்பீட்டு தொகை வழங்கப்படமால் இருப்பதை கண்டித்து அனைத்து விவசாயிகள் சார்பில் அடுத்த மாதம் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதையடுத்து இன்று விவசாயிகளுடன் எட்டயபுரம் தாலூகா அலுவலகத்தில் பயிர்காப்பீடு பிரச்சினை தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த விவசாயிகள் வாயில் கருப்புதுணி அணிந்தாவறு வந்தனர். காவல்துறையினர் கருப்புதுணி இல்லமால் வரும்படி கூறினார். இதனால் விவசாயிகள் மற்றும் காவல்துறையினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது மட்டுமின்றி, வாயில் கருப்புத்துணி அணிந்தவாறு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.



    எட்டயபுரம் தாசில்தார் சசிக்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வேளாண்மை துறை அதிகாரிகள், பயிர்காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.  அடுத்த மாதம் 2 ந்தேதி முதல் 8ந்தேதிக்குள் காப்பீட்டு தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையெடுத்து விவசாயிகள் தற்காலிகமாக போராட்டத்தினை ஒத்தி வைப்பதாகவும், பயிர்காப்பீட்டு தொகை வரவு வைக்கப்படவில்லை என்றால் மிகப்பெரிய அளிவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

    செய்தியாளர் : மகேஷ்வரன்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Farmers, Thoothukudi

    அடுத்த செய்தி