• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 500 ரூபாய் எடுத்தாயா.. ஆத்திரத்தில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் -திருச்செந்தூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

500 ரூபாய் எடுத்தாயா.. ஆத்திரத்தில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் -திருச்செந்தூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

மனைவியை கொன்ற கணவன்

மனைவியை கொன்ற கணவன்

தூத்துக்குடியில் மனைவியை கொடூரமாக வெட்டிக் கொலை செய்த கணவனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

  • Share this:
    திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினத்தில் 500 ரூபாயை மனைவி எடுத்தாக கூறி கணவன் மனைவியை கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருச்செந்தூர் அருகேயுள்ள குலசேகரன்பட்டினம் கருங்காளி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுடலை(70) இவருக்கு திருமணமாகி முத்தம்மாள் என்ற மனைவியும் 3 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர் மூன்று மகள்கள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அவரது மனைவி முத்தம்மாளுக்கும் சுடலைக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக இருவரும் ஒரே காம்பவுண்டில் அடுத்தடுத்து தனித்தனி வீட்டில் வசித்து வந்தனர்.முத்தம்மாள் அவரது மகன் மற்றும் மருமகளுடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் முத்தம்மாள்  மட்டும் இருந்துள்ளார். முத்தம்மாள் வீட்டில் கட்டிலில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுடலை முத்தம்மாள் இடம் 500 ரூபாய் பணத்தை எடுத்ததாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய்நிலையில் சுடலை தான் வைத்திருந்த அரிவாளால் முத்தம்மாளின்  இடது கை மார்பு, தலை ஆகிய இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் முத்தம்மாளின் இடது கை மணிக்கட்டு துண்டானது சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

    Also Read:  கள்ளக்காதலிக்காக நண்பனை குத்திக்கொலை செய்த இளைஞன்.. விபத்து போல் சித்தரிக்க முயற்சி - காட்டிக்கொடுத்த போன்கால்

    இது குறித்து தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்சொந்தூர் ஏ.எஸ்.பி ஹர்சிங் மற்றும் குலசேகரன்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் சுடலையை பிடித்து குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
    முத்தம்மாள் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தகவல் தெரிந்து முத்தம்மாளின் மகள் மருமகன் மற்றும் உறவினர்கள் வீட்டிற்கு வந்து கதறி அழுது கொண்டிருந்தனர்.

    இந்த நிலையில் திருச்செந்தூர் உட்கோட்ட குற்றப்பிரிவு போலீசார் கொலைக்கு பயன்படுத்திய அரிவாளை எடுப்பதற்காக காவல் நிலையத்திலிருந்து ஆட்டோ மூலம் சுடலை வீட்டிற்கு கொண்டு வந்தனர். அங்கு இருந்த முத்தம்மாளின் உறவினர்கள் சுடலையை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போலீசாருக்கும் முத்தம்மாள் உறவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    செய்தியாளர்: பி.முரளி கணேஷ் (தூத்துக்குடி)

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: