Home /News /tamil-nadu /

திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும் தீவிரவாதம் தன்னால் தலையெடுக்கும், அவங்க ராசி அப்படி - கடம்பூர் ராஜூ

திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும் தீவிரவாதம் தன்னால் தலையெடுக்கும், அவங்க ராசி அப்படி - கடம்பூர் ராஜூ

கடம்பூர் ராஜூ

கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி : திமுக என்றைக்கு ஆட்சிக்கு வந்தாலும் தீவிரவாதம் தன்னால் தலையெடுக்கும், தீவிரவாதத்திற்கும், திமுகவிற்கும் ஒரு ராசி உண்டு என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தெற்கு பஜாரில் நடைபெறும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளை முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.செ.ராஜூ பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் திமுக என்றைக்கு ஆட்சிக்கு வந்தாலும் தீவிரவாதம் தன்னால் தலையெடுக்கும், தீவிரவாதத்திற்கும், திமுகவிற்கும் ஒரு ராசி உண்டு. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி லண்டன், ஸ்ரீலங்கா சென்று வந்த போது அவருக்கு நடக்காத தீவிரவாதம் இங்கு நடைபெற்றது.

அதே போன்று கோவை குண்டு வெடிப்பு சம்பவமும் ஒரு எடுத்துக்காட்டு தான். கடந்த 10 ஆண்டுகாலம் தமிழகம் அமைதி பூங்காவாக இருந்தது. தீவிரவாதத்திற்கு இடமில்லை என்று இருந்தது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் தான் ராணுவ கட்டுப்பாடுவுடன் சட்ட ஒழுங்கினை நிலைநாட்டி, 3 மாநிலங்கள், இராணுவம் பிடிக்க முடியாத வீரப்பனை சுட்டு கொலை செய்து பிடித்தார். திருட்டு விசிடி ஒழிப்பு, கந்து வட்டி ஒழிப்பு, லாட்டரி ஒழிப்பு என சட்டங்களை கொண்டு வந்தார்.

மேலும் அதிமுக ஆட்சியில் ரவுடிகள் தமிழகத்தினை விட்டு வெளியேறி சம்பவம் நடைபெற்றது. அன்றைக்கு சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தது. இன்று சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. வாக்களிக்காதவர்களுக்கும் சிறப்பான ஆட்சி தருவோம் என்று கூறும் முதல்வர் அதனை செய்தால் நன்றாக இருக்கும், அதிமுக ஆட்சியில் நகைக்கடனுக்கு நிபந்தனை இல்லை என்று அறிவித்து இருந்தோம்.

Also Read : ஆதிபராசக்தியின் அவதாரம் என தான் கூறவில்லை, எனது ஆன்மீகத்தை உணர்ந்தவர்கள் கூறுகின்றனர் - அன்னபூரணி

ஆனால் திமுக அரசு பல நிபந்தனை விதித்துள்ளது. 5 பவுன் நகை அடகு வைத்திருப்பவார்கள் ஏழை, எளிய மக்கள் தான், எனவே 100 சதவீதம் அதிமுக அரசின் வழிமுறைகளை பின்பற்றி நகைக்கடன் தள்ளுப்படி செய்ய வேண்டும்.விவசாயிகள் பெற்ற பயிர்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், செய்தால் பாராட்டுவோம், இல்லையெற்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

செய்தியாளர் : மகேஷ்வரன், கோவில்பட்டி
Published by:Vijay R
First published:

Tags: ADMK, Kadambur raju, Tuticorin

அடுத்த செய்தி