கீழடிக்கு முந்தைய வரலாறு சிவகளை அகழாய்வின் மூலம் தெரிய வரும்: அமைச்சர் தங்கம் தென்னரசு

கீழடிக்கு முந்தைய வரலாறு சிவகளை அகழாய்வின் மூலம் தெரிய வரும்: அமைச்சர் தங்கம் தென்னரசு

கீழடி அகழாய்வு என்பது  2600 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை நதியின் வரலாற்றை எடுத்துறைக்கின்றது. தமிழக பண்பாட்டின் அடையாளச் சின்னமாக விளங்குவது போல் சிவகளை என்பது அதற்கு முந்தைய காலகட்டத்தை எடுத்துறைப்பதாக இருக்கும் என்றார்.

 • Share this:
  சிவகளை அகழாய்வு பணி என்பது தமிழக வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடிக்கும், கீழடிக்கு முந்தைய வரலாறு சிவகளை அகழாய்வின் மூலம் தெரிய வரும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

  தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் ரூபாய் 34 லட்சம் மதிப்பீட்டில் தமிழக தொல்லியல் துறையினரால் இரண்டாம் கட்ட அகழாய்வு  பிப்ரவரி 2-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இறந்தவர்கள் புதைக்கப்பட்டுள்ளதாக கருதப்படும் சிவகளை பரம்பு, பேட்மாநகரம், ஸ்ரீ மூலக்கரை ஆகிய பகுதிகளிலும் பழங்கால மனிதர்களின் வாழ்விட பகுதிகளாக கருதப்படும் செக்கடி, ஆவாரங்காடு, பராக்கிரமபாண்டி ஆகிய இடங்களிலும் அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  சிவகளையில் தொல்லியல் துறை அகழாய்வு இயக்குனர் பிரபாகரன் தலைமையில் 40 பணியாளர்கள் மூலம் 18 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. இதில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படும் கல் வட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் 40க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழிகள் இருப்பது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. சிறியதும் பெரியதுமாக 2 அடி முதல் 4 அடி வரையிலான முதுமக்கள் தாழிகள் உள்ளன.

  சிவகளையில் நடைபெற்று வரும் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ள முதுமக்கள் தாழிகளில் உள்ள பொருட்களை கண்டறிவதற்கான பணியினை மதுரை காமராஜர் பல்கலைக்கழக மரபியல் துறைத் தலைவர் குமரேசன் தலைமையிலான பேராசிரியர் குழுவினர் ஜூலை 1ஆம் தேதி தொடங்கி வைத்தனர்.

  இந்நிலையில்,தமிழக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கனிமொழி எம்.பி., மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் உள்ளிட்டோர் சிவகளையில் தொல்லியல் கள அகழாய்வு பணி களை பார்வையிட்டு பழங்காலத்தில் இரும்பினாலான ஆயுதங்கள், மண்பாண்டங்கள், அணிகலங்கள், புகைப்பான்கள், செம்பு காய்ன்கள் உள்ளிட்ட பொருட்களை காட்சிப்படுத்தினர்.

  Also read: தேமுதிக - திமுக உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி அமைக்க வாய்ப்பு?

  பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், சிவகளை அகழாய்வு தமிழக வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடிக்கும் ஆய்வாகும். கீழடி அகழாய்வு என்பது  2600 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை நதியின் வரலாற்றை எடுத்துறைக்கின்றது. தமிழக பண்பாட்டின் அடையாளச் சின்னமாக விளங்குவது போல் சிவகளை என்பது அதற்கு முந்தைய காலகட்டத்தை எடுத்துறைப்பதாக இருக்கும்.

  பொருநை நதி கரையில் மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளச் சின்னமாக  உள்ளது. சிவகளை அகழாய்வில் கருப்பு சிவப்பு மண் பாண்டங்கள் இரும்பு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆதிச்சநல்லூர் அகழாய்வு குறித்து மத்திய தொல்லியல் துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கி.மு. 650 ஆண்டுக்கும் கி.மு. 750 ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட பாவம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  சிவகளை அகழாய்வு பணி என்பது அதற்கு முந்தைய  காலகட்டமாக இருக்கும். இரும்புக் காலத்தின் துவக்கத்தில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. சிவகளை அகழாய்வு பணியின்போது தோண்டப்பட்டுள்ள குழியில் ஒரே இடத்தில் பல்வேறு முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கூடுதலாக அகழாய்வு பணிகள் செய்வதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொற்கையில் கடல் பகுதியில் ஆய்வு மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

  செய்தியாளர் - முரளி கணேஷ்
  Published by:Esakki Raja
  First published: