• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தூத்துக்குடியில் கோவில் கொடை விழாவில் நடனமாடியதை தட்டிக்கேட்ட திமுக வட்ட செயலாளர் குத்திக்கொலை: 4 பேர் கைது

தூத்துக்குடியில் கோவில் கொடை விழாவில் நடனமாடியதை தட்டிக்கேட்ட திமுக வட்ட செயலாளர் குத்திக்கொலை: 4 பேர் கைது

தூத்துக்குடியில் கோவில் கொடை விழாவில் நடனமாடியதை தட்டிக்கேட்ட திமுக வட்ட செயலாளர் குத்திக்கொலை: 4 பேர் கைது

தூத்துக்குடியில் கோவில் கொடை விழாவில் நடனமாடியதை தட்டிக்கேட்ட திமுக வட்ட செயலாளர் குத்திக்கொலை: 4 பேர் கைது

தூத்துக்குடியில் கோவில் கொடை விழாவில் நடனமாடியதை தட்டிக்கேட்ட திமுக 45வது வட்ட செயலாளர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
    தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலசண்முகபுரம் வண்ணார் தெருவைச் சேர்ந்த மனோகரன் மகன் நடராஜன் (38) என்பவரை தூத்துக்குடி ராமசாமிபுரத்தில் உள்ள அவரது ஷிப்பிங் கம்பெனி முன்பு மர்ம நபர்கள் கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளனர்.

    இதுகுறித்து தகவலறிந்த தென்பாகம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.

    Also read: காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம் பெண் தற்கொலை: கணவன் கைது.. வயது வித்தியாசம் காரணமா? போலீசார் விசாரணை

    இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு தனிப்படை அமைத்து குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    உத்தரவின் பேரில் மேற்படி தனிப்படையினரின் தேடுதல் வேட்டையில், தூத்துக்குடி தாமோதர நகரை சேர்ந்த தங்கதுரை மகன் தங்ககார்த்திக் (25), தூத்துக்குடி பெருமாள்புரத்தை சேர்ந்த சௌந்திரபாண்டியன் மகன் அருண்குமார் (22), தூத்துக்குடி சிவந்தாகுளம் ரோடு பகுதியை சேர்ந்த செல்வம் மகன் அந்தோணி முத்து (21) மற்றும் தூத்துக்குடி தாமோதரநகர் பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் மாரிமுத்து (21) ஆகிய 4 பேர் சேர்ந்து முன்விரோதம் காரணமாக நடராஜனை கத்தியால் தாக்கிக் கொலை செய்தது தெரியவந்தது.

    தனிப்படை போலீசார் மேற்படி 4 பேரையும் கைது செய்து, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். அவர்களிடமிருந்து கொலை செய்வதற்கு பயன்படுத்திய கத்தியையும்  பறிமுதல் செய்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: