திமுக யார் மீதும் பழிவாங்கும் நோக்கத்தோடு நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமில்லை: கனிமொழி

திமுக யார் மீதும் பழிவாங்கும் நோக்கத்தோடு நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமில்லை: கனிமொழி

திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. இதனை பொறுக்க முடியமால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிமுக விமர்சனம் செய்து வருகிறது என கனிமொழி எம்.பி.தெரிவித்துள்ளார்.

  • Share this:
திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. இதனை பொறுக்க முடியமால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிமுக விமர்சனம் செய்து வருகிறது என கனிமொழி எம்.பி.தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்  அரசு மருத்துவமனையில், உள் நோயாளிகளுக்காக பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து புதிதாக அமைக்கப்பட்ட ஆக்ஸிஜன் அறையை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு ஆக்சிஜன் அறையை திறந்து வைத்தார். பின் அங்கிருந்த பொதுமக்களிடம் தங்களது கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து கனிமொழி எம்.பி  செய்தியாளர்களிடம் பேசினார்.

கொடநாடு கொலை வழக்கில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மீது பொய்யாக குற்றம் சாட்டப்படுவதாக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து கேட்டபோது, "மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும்" என கூறினார்.

Also read: மாணவர்களை ஊக்குவிக்க ரூ.200 கோடி மதிப்பீட்டில் கற்பித்தல் வாசிப்பு இயக்கம் திட்டம்: நிதியமைச்சர் பிடிஆர்

தொடர்ந்து பேசுகையில், மக்களுக்கு தெரியும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது நிறைவேற்றவில்லை என்று, பத்து வருடங்களாக மக்களைதொடர்ந்து ஏமாற்றி கொண்டு இருந்ததால் தான் இன்று மக்கள் அவர்களுக்கு சரியான பாடம் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள்.

எந்த தேர்தல் வாக்குறுதிகளையும் அவர்கள் நிறைவேற்றியது கிடையாது, ஆனால் தளபதி மு.க.ஸ்டாலின் தலைவர் கலைஞர் வழியில் முதலமைச்சர் பொறுப்பேற்ற நாள் தொடங்கி இன்றுவரை தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக  தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டு வருகிறார்.

ஒரே நாளில் யாராலும் அனைத்து வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலாது. ஆனால், இதை பொறுக்காமல் காழ்ப்புணர்ச்சியோடு அரசியல் செய்யும் நோக்கில் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகம் யார் மீதும் காழ்ப்புணர்ச்சியால் பழிவாங்கும் நோக்கத்தோடு நடவடிக்கையை செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும், ஒரு பெரிய கொலை வழக்கை அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருக்க வாய்ப்பில்லை, யாராக இருந்தாலும் அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தன்னுடைய கடமையை அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது. இதில் அவர்களுக்கு (அதிமுகவிற்கு) மடியில் கனமிருந்தால் வழியில் பயம் இருக்கலாம் என்றார்.

எதிர்க்கட்சியினருக்கு சட்டமன்றத்தில் போதிய கால அவகாசம் கொடுக்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு குறித்து கேட்டபோது,

யார் எதிர்க்கட்சியினராக இருந்தாலும் அவருடைய கருத்துக்களும் கேட்கப்படுகிறது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முதலமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவிலும் எதிர்க்கட்சியினருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அதேபோன்று சட்டமன்றத்திலும் பேச வாய்ப்பளித்த போது? அவர்கள் பேச முடியமால் வெளியே சென்றால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்றார்.
Published by:Esakki Raja
First published: