• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி

திருச்செந்தூர்

திருச்செந்தூர்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் பத்து நாட்களுக்கு பிறகு மீண்டும் இன்று பக்தர்கள் தரிசனம்

  • Share this:
    திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் 10 நாட்களுக்கு பிறகு மீண்டும் இன்று பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இன்று முதல் முடி காணிக்கை செலுத்துவதற்கு கட்டணம் கிடையாது.

    அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் கொரொனா  தடுப்பு நடவடிக்கையாக ஆவணித் திருவிழாவின் போது ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 5ஆம் தேதி வரை பத்து நாட்கள் பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் இன்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் காலை 6 மணி முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்த கட்டணம் கிடையாது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறநிலை துறை மானியக் கோரிக்கையில் சட்டசபையில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து இன்று முதல் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்த கட்டணம் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்களுக்கு கட்டணம் கிடையாது என எழுதப்பட்டிருந்த சீட்டு வழங்கப்பட்டது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வந்த பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி கடலில் புனித நீராடி தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர். மேலும் தமிழக அரசுக்கும் அறநிலை துறை அமைச்சருக்கும் பக்தர்கள் நன்றியை தெரிவித்தனர். நாழிக்கிணறு தீர்த்தத்தில் பக்தர்கள் புனித நீராட அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    செய்தியாளர் : முரளி கணேஷ் (தூத்துக்குடி) 



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: