முகப்பு /செய்தி /தமிழ்நாடு / நாங்க பார்த்துக்குறோம் நிலத்தை வித்துடுங்க.. பணத்தை சுருட்டிக்கொண்டு தந்தையை கைவிட்ட மகள்கள்

நாங்க பார்த்துக்குறோம் நிலத்தை வித்துடுங்க.. பணத்தை சுருட்டிக்கொண்டு தந்தையை கைவிட்ட மகள்கள்

முதியவர் பட்டினி போராட்டம்

முதியவர் பட்டினி போராட்டம்

மகள்கள் நிலத்தை ஏமாற்றி விற்பனை செய்த நிலையில் நிலத்தினை மீட்ட தர கோரி முதியவர் ஒருவர் பட்டினி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • Last Updated :

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நிலத்தை ஏமாற்றி விற்பனை செய்து விட்டு, ஒருவேளை உணவிற்காக பரிதவிக்க விட்ட மகள்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவர்களது தந்தை கோட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த துறையூரைச் சேர்ந்தவர் சுந்தரம் மகன் கோபால்(73). இவரது மனைவி பெருமாள் அம்மாள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். கோபால் - பெருமாள் அம்மாள் தம்பதிக்கு அமரஜோதி மற்றும் விஜயா செல்வராணி ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. கோபாலுக்கு அதே பகுதியில் 6 ஏக்கர் காட்டு நிலமும், சுமார் ஒன்றே கால் ஏக்கர் பம்புசெட் உடன் கூடிய தோட்டமும் இருந்துள்ளது. இதை குடும்ப சூழ்நிலை காரணமாக விற்பனை செய்துவிட்டாதாகக் கூறப்படுகிறது. அவர் மீதம் வைத்திருந்த 51சென்ட நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார்.

இதற்கிடையில் அவருடைய 2 மகள்களும், அவர் வைத்திருந்த நிலத்தினை தங்களுக்கு தெரிந்த ஒருவருக்கு விற்பனை செய்ய வலியுறுத்தியுள்ளனர். இதில் கிடைக்கும் பணத்தினை வங்கியில் போட்டு விடுவதாகவும், அவரை பார்த்து கொள்வதாகவும் கூறியுள்ளனர். இதனை நம்பி கோபாலும் நிலத்தினை விற்பனை செய்துள்ளனர். ஆனால் அதில் கிடைத்த பணத்தை இரு மகள்களும் வாங்கி கொண்டு, அவர்கள் சொன்னபடி வங்கியிலும் செலுத்தமாலும், கோபாலை பார்த்துக்கொள்ளமால் அவரை பரிதவிக்க விட்டுள்ளனர்.

Also Read:  ஹெல்மெட் போடவில்லை.. கும்பகோணத்தில் ஓடும் ஆட்டோவுக்கு மதுரையில் கேஸ் போட்ட போலீஸார் - ஷாக்கான உரிமையாளர்

இதையடுத்து முதியவர் கோபால் தெருவில் ஆங்காங்கே கிடக்கும் பழைய பேப்பர், பாட்டில்களை பொறுக்கி, அதை கடையில் கொடுத்து அதில் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து வருகிறார். மேலும் அதே பகுதியில் மிகவும் பாழடைந்த நிலையில் உள்ள அருந்ததியர் காலனியில் குடியிருந்து வருகிறார். தன்னை ஏமாற்றிய மகள்களிடம் இருந்து நிலம் விற்பனை செய்ததில் கிடைத்த பணத்தையோ அல்லது நிலத்தினையோ மீட்டு தரும்படி முதியவர் கோபால் காவல் துறை, மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் எவ்வித பலனும் கிடைக்காததையடுத்து, வாழ்க்கையில் விரக்தியடைந்த கோபால் நேற்று கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் திடீரென பட்டினி போராட்டத்தில் ஈடுபடுவதாகக் கூறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தன்னை போராட்டத்தில் ஈடுபட்டார்.

Also Read:  நவராத்திரி விழாவில் 8 மணிநேரம் பம்பை உடுக்கை அடித்து நாட்டுப்புறக் கலைஞர்கள் சாதனை

top videos

    அதையடுத்து கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அலுவல் பணி காரணமாக வந்திருந்த மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், கோபாலை அழைத்து மனுவை பெற்றுக் கொண்டவர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார். அப்போது கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் முருகானந்தம், வட்டாட்சியர் அமுதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.தொடர்ந்து கோபாலிடம் கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் ஆர்தர்ஜஸ்டீன், மாதவராஜா ஆகியோர் விசாரணை நடத்தினர். அதையடுத்து கோபால் தனது போராட்டத்தை கைவிட்டார்.

    First published:

    Tags: Crime News, Father, Land Documents