தூத்துக்குடியில் கோவிட்-19 தடுப்பூசி போடப்படும் இடங்கள் - மாநகராட்சி தகவல்

கொரோனா தடுப்பூசி

கொரோனா குறித்த சந்தேகங்களுக்கு தூத்துக்குடி மாநகராட்சி கொரோனா கட்டுப்பாட்டு மைய எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கொரோனா தொற்றை தடுப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கோவிட்-19 தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்த தகவல்களை தூத்துக்குடி மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

  தூத்துக்குடி மாநகராட்சியில் எங்கு கோவிட்-19 தடுப்பூசி போடப்படுகின்றது?

  • அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

  • நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள்  1. முள்ளக்காடு,

  2. திரேஸ்புரம்,

  3. கணேஷ்நகர்,

  4. தருவை ரோடு,

  5. பாத்திமா நகர்,

  6. மடத்தூர்


  யாரெல்லாம் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்?

  பிரஷர், சுகர், கேன்சர் போன்ற நோய் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாமா?
  கண்டிப்பாக செலுத்திக் கொள்ளலாம்

  Also Read: திருமண பத்திரிகையில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே இ-பதிவு சான்றிதழ் பெற முடியும்: தமிழக அரசு

  முதல்தவனை மற்றும் இரண்டாவது தவனை வெவ்வேறு வகை தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாமா?
  முற்றிலும் கூடாது. ஒரே வகை தடுப்பூசிதான் செலுத்திக்கொள்ள வேண்டும்.

  என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று குறித்த சந்தேகங்களுக்கு 6383755245, 0461 - 4227202 என்ற தூத்துக்குடி மாநகராட்சி கொரோனா கட்டுப்பாட்டு மைய எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Ramprasath H
  First published: