கோவில்பட்டியில் தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்களுக்கு கொரோனா பரிசோதனை; வாகனங்கள் பறிமுதல்!

வாகனங்கள் பறிமுதல், கொரோனா பரிசோதனை

இதில் இன்று மட்டும் 112 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் முககவசம் அணியமால் சென்றவர்களுக்கு அபாரதமும் விதிக்கப்பட்டது.

  • Share this:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் முழு ஊரடங்கினை மீறி தேவையில்லமால் சுற்றியவர்களுக்கு நகராட்சி சுகாதார பிரிவு ஊழியர்கள் கொரோனா பரிசோதனை செய்தனர். மேலும் தேவையில்லமால் சுற்றியவர்களின் 200க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் முழு ஊரடங்கு இருந்தாலும் பலரும் தேவையில்லமால் இரு சக்கர வாகனங்களில் சுற்றி வருகின்றனர்.

Also read: கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் விற்பனை: கோவில்பட்டியை சேர்ந்த அண்ணன், தம்பி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது!

இந்நிலையில் கோவில்பட்டி கடலையூர் சாலையில் தேவையில்லமால் சுற்றியவர்களை நகராட்சி சுகாதார பிரிவு ஊழியர்கள் அழைத்து கொரோனா பரிசோதனை செய்தனர்.

இதில் இன்று மட்டும் 112 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் முககவசம் அணியமால் சென்றவர்களுக்கு அபாரதமும் விதிக்கப்பட்டது.

இதே போன்று காவல்துறையினரும் கோவில்பட்டி நகரில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். தேவையில்லமால் சுற்றிய 200க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்ததது மட்டுமின்றி அபாரதம் விதித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Esakki Raja
First published: