• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வீடு வீடாக சென்று தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் கல்லூரி மாணவர்கள்!

வீடு வீடாக சென்று தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் கல்லூரி மாணவர்கள்!

காமராஜ் கல்லூரி மாணவர்கள்

காமராஜ் கல்லூரி மாணவர்கள்

தடுப்பூசி செலுத்தாத மக்களை கண்டறிந்து அருகில் தங்களது கல்லூரி உள்ளது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறுகிறது. வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுத்து செல்கின்றனர்.

  • Share this:
    தூத்துக்குடியில் வீடு வீடாக சென்று தடுப்பூசியின் அவசியத்தை எடுத்துக்கூறி தடுப்பூசி மையத்திற்கு அன்பாய் அழைப்பு விடுத்து வருகிறார்கள் காமராஜ் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள்.

    தமிழகத்தில் கொரோனா  பரவலை  தடுக்க  அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனாவில் இருந்து மக்கள் தங்களை பாதுகாக்க தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியமாகிறது. உலகின் பல நாடுகளில் 70 சதவிகிதம் வரை மக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டபோதும் நமது நாட்டில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் விகிதம் ஒற்றை இலக்கத்திலேயே இருக்கிறது.

    தடுப்பூசியின் அவசியம் குறித்து தமிழக அரசு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருவதோடு தடுப்பூசிகளுக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அரசின் இந்த முயற்சிக்கு தோள் கொடுக்க கூடிய விதத்தில் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் தடுப்பூசியின் அவசியம் குறித்து வீடு வீடாக சென்று எடுத்துக்கூறி பொதுமக்களை தடுப்பூசி முகாம்களுக்கு அழைத்து வரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் காமராஜ் கல்லூரியில் கொரோனா தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நாள்தோறும் சுற்றுவட்டார பகுதி மக்கள் வந்து தடுப்பு ஊசி செலுத்தி செல்கின்றனா். இந்த  தடுப்பூசி மையத்திற்கு வரும் மக்களுக்கு வழிகாட்டும் பணியில்  இந்த கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் 20 பேர் ஈடுபட்டு வருகின்றனர்.  காலை 9.30 மணி முதல் மதியம் ஒரு மணி வரை 10 மாணவர்களும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை  10 மாணவா்களும் என இரண்டு குழுக்களாக செயல்பட்டு வருகின்றனர்.

    மாநகராட்சி சார்பில் தடுப்பூசி செலுத்தும் மருத்துவ குழுவினருக்கு இந்த மாணவர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்களின் விவரங்களை கோப்புகளில் பதிவு செய்து கொடுக்கின்றனர்.  45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தக்கூடிய இடம், 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தக்கூடிய இடம் அமைந்துள்ள இரண்டு பிரிவு இருக்கும் மக்களை வழிகாட்டி அழைத்துச் செல்கின்றனர்.  மேலும் தடுப்பூசி செலுத்திய பிறகு வெளியே வரக் கூடிய மக்களுக்கு அன்றைய தினம் என்ன மாதிரியான நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எந்த மருந்துகளை சாப்பிட வேண்டும், எந்த சாப்பிடக்கூடாது என்பது குறித்து விளக்கம் அளித்து அனுப்பி வைக்கின்றனர்.

    மேலும் இந்த மாணவர்கள் முகாமிற்கு அருகில் உள்ள பகுதிகளான முனியசாமி புரம், லெவிஞ்சிபுரம், பிரையன்ட் நகா் உள்ளிட்ட பகுதிகளுக்கு வீடு வீடாக சென்று மக்களிடம் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அவசியம் குறித்து எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். பிறகு தடுப்பூசி செலுத்தாத மக்களை கண்டறிந்து அருகில் தங்களது கல்லூரி உள்ளது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறுகிறது. வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுத்து செல்கின்றனர்.

    Read More:   அரசு மருத்துவமனையில் அதிக உயிரிழப்புகள்: அமைச்சர் முன்னிலையில் திமுக எம்.எல்.ஏ பகிரங்க குற்றச்சாட்டு!

    ஆரம்பத்தில் முகாமிற்கு தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்த நிலையில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் எடுத்த இந்த புதிய முயற்சியின் காரணமாக தற்போது நாளுக்கு நாள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள இந்த முகாமிற்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

    தூத்துக்குடி செய்தியாளர் முரளி கணேஷ்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: