மாணவர்களுக்கு இலவச பயணம் என அரசு அறிவித்த நிலையில் டிக்கெட் கட்டணம் வசூல் என புகார்!

இலவச பயணத்துக்கு டிக்கெட் வசூல்?

மாணவர்கள் பள்ளிச் சீருடை அல்லது பள்ளி அடையாள அட்டை வைத்திருந்தால் அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம் என்று தமிழக அரசும், அரசு போக்குவரத்து அறிவித்திருந்தது.

  • Share this:
கோவில்பட்டி பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு அரசுப் பேருந்தில் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு  எழுந்துள்ளது,

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் நேற்று (செப்டம்பர் 1)  9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் பள்ளிச் சீருடை அல்லது பள்ளி அடையாள அட்டை வைத்திருந்தால் அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம் என்று தமிழக அரசும், அரசு போக்குவரத்து அறிவித்திருந்தது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பல்வேறு கிராம பகுதியில் இருந்து நகர பகுதிக்கு இயக்கப்படும் அரசு பஸ்களில் பயணம் செய்த அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு பஸ்களில் நேற்று பஸ் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக புதூர், நாகலாபுரம், மேலக்கரந்தை, மாசார்பட்டி வழியாக சாத்தூர் செல்லக்கூடிய அரசு பஸ்களில் நேற்று பள்ளி மாணவர்களிடையே  டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாணவர்கள் கேட்டதற்கு தங்களுக்கு எவ்வித சர்க்குலர் வரவில்லை என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து மாணவர்கள் பணம் கொடுத்து டிக்கெட் எடுத்து பஸ்ஸில் பயணம் செய்து வருகின்றனர்.

Also Read:  பஞ்ஷிர் போராளிகளிடம் செம அடி வாங்கிய தாலிபான்கள்.. நூற்றுக்கணக்கில் பலி என தகவல்!

சில அரசு பஸ்களில் சீருடை அணிந்த மாணவர்களுக்கு டிக்கெட் வாங்க வில்லை என்று கூறுகின்றனர். ஆனால் சில நடத்துனர்கள் தங்களுக்கு எவ்வித சர்க்குலர் வரவில்லை என்று கூறி  அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் வசூலித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக ‍ அரசு பஸ் நடத்துனர் ஒருவரிடம் கேட்டபோது தான் டிக்கெட்டுக்கு பணம் வாங்கவில்லை என்றும் , நேற்று வசூல் செய்து இருந்தால் எனக்கு தெரியாது என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மகேஸ்வரன், செய்தியாளர் - கோவில்பட்டி
Published by:Arun
First published: