ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

1330 திறக்குறளை சொல்லி அசத்தும் 7ம் வகுப்பு மாணவிகள்... குவியும் பாராட்டு

1330 திறக்குறளை சொல்லி அசத்தும் 7ம் வகுப்பு மாணவிகள்... குவியும் பாராட்டு

திறக்குறளை சொல்லி அசத்தும் மாணவிகள்

திறக்குறளை சொல்லி அசத்தும் மாணவிகள்

Thoothukudi District : சிறப்பு அழைப்பாளராக பட்டிமன்ற நடுவர், திரைப்பட நடிகர் கலைமாமணி முனைவர் கு.ஞானசம்பந்தன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கோவில்பட்டியில் 1330 திறக்குறளை எந்த விதத்தில் கேட்டாலும் சொல்லி அசத்திய அரசு பள்ளி மாணவிகளுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மகிழ்வோர் மன்றம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஞானசம்பந்தன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் வேணி, கனகவள்ளி இருவரும் 1330 திறக்குறளை எந்த விதத்தில் கேட்டாலும், அடுத்த நொடியே சொல்லி அசத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் மகிழ்வோர் மன்றம் சார்பில் ஒவ்வொரு மாதந்திர கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதில் பள்ளிக் குழந்கைளின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மகிழ்வோர் மன்றத்தின் 53வது மாதக்கூட்டம் இன்று எட்டயபுரம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக பட்டிமன்ற நடுவர், திரைப்பட நடிகர் கலைமாமணி முனைவர் கு.ஞானசம்பந்தன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் என்.சுப்பையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் வேணி, கனகவள்ளி இருவரும் 1330 திருக்குறளை எந்த விதத்திலும் கேட்டாலும் அடுத்த நொடியே சொல்லி அசத்தினர்.

தலைகீழாக, குறள் எண், குறளின் முன் அல்லது கடைசி சொல் என்று எப்படி கேட்டாலும் திருக்குறளை சொல்லி அசத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றனர். மாணவிகளின் திறமையை பாராட்டி கலைமாமணி முனைவர் கு.ஞானசம்பந்தன் பரிசுகள் வழங்கினார்.

செய்தியாளர் : மகேஷ்வரன், தூத்துக்குடி

First published:

Tags: Thoothukudi