ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கிராமத்தை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்ட அருந்ததியர் சமூக மக்கள் : காரணம் இதுதான்

கிராமத்தை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்ட அருந்ததியர் சமூக மக்கள் : காரணம் இதுதான்

பட்டா இன்றி தவிக்கும் அருந்ததியர் சமூக மக்கள்.

பட்டா இன்றி தவிக்கும் அருந்ததியர் சமூக மக்கள்.

3 குடும்பத்தினர் காலம் காலமாக குடியிருந்து வருகின்றனர். அரசும் தொகுப்பு வீடு கட்டி கொடுத்துள்ளது. ஆனால் பட்டா வழங்கவில்லை.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

வீடு, மின்சாரம், குடிநீர் வழங்கிய அரசு, பட்டா வழங்கவில்லை என்பதால் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிராமத்தினை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் அருந்ததியர் சமூகத்தினை சேர்ந்த குடும்பங்கள். இதற்காக இவர்கள் 20 ஆண்டுகளாக போராடி வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கீழஈரால் ஊராட்சிக்குட்பட்ட கிராமம் நற்கலைக்கோட்டை கிராமத்தில் 5 தலைமுறைக்கு மேலாக வசித்து வரும் அருந்ததியர் சமூகத்தினை சேர்ந்த, குடும்பங்களுக்கு அரசு தொகுப்பு வீடு, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுத்த நிலையில், பட்டா வழங்கவில்லை என்பதால் கடந்த 20 ஆண்டுகளாக அந்த குடும்பங்களை சேர்ந்தவர்கள் பட்டா போராடி வருகின்றனர்.

இந்நிலையில் அருகில் இருப்பவர்கள் இடங்களை ஆக்கிரமிப்பு செய்யும் நிலை இருப்பதால் பட்டா இல்லை என்பதால் வேறு வழியில்லாததால் அந்த குடும்பங்கள் ஊரை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நற்கலைக்கோட்டை கிராமத்தில் கடந்த 5 தலைமுறைகளாக அருந்ததியர் சமூகத்தினை 3 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

அவர்கள் வசிக்கும் இடம் அரசின் நத்தம் புறம்போக்கு நிலம் என்று கூறப்படுகிறது. இதில் 2 குடும்பத்திற்கு கடந்த 2001ஆம் ஆண்டு அரசு சார்பில் இந்திரா காந்தி நினைவு குடியிறுப்பு திட்டத்தில் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மாரியம்மாள் என்பவர் 2006 முதல் 2011 வரை கீழ ஈரால் ஊராட்சி மன்ற தலைவராக இருந்துள்ளார். அரசு புறம்போக்கு நிலத்தில் அரசு வீடு கட்டி தந்தது மட்டுமின்றி, மின் இணைப்பு, குடிநீர் வசதி என எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து இருந்தாலும் கடந்த 20 ஆண்டுகளாக அந்த வீட்டிற்கான பட்டா வழங்கமால் காலம் தாழ்த்தி வருகிறது.

தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 20 ஆண்டுகளாக மனு அளித்து வருகின்றனர். ஆனால் தற்பொழுது வரை பட்டா வழங்கவில்லை. இருப்பினும் தற்பொழுது வரை ஊராட்சியில் வீட்டு தீர்வை ரசீது செலுத்தி வருகின்றனர். இடையில் கீழ ஈரால் ஊராட்சி தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய, அப்போது கிராம மக்கள் சார்பில் ஊராட்சி மன்ற தலைவருக்கு மாரியம்மாள் நிறுத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அப்போதும் வீட்டிற்கு பட்டா கேட்டு பல முறை அரசுக்கு மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்த சூழ்நிலையில் 3 அருந்ததியர் சமூக குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசிக்கும் பகுதியில் இருப்பவர்கள் இடங்களை ஆக்கிரமிப்பு செய்யும் நிலை உருவாகியுள்ளது. இப்பிரச்சினை தொடர்பாக எங்கு சென்றாலும் இந்த 3 குடும்பத்தினரிடம் பட்டா இல்லை என்பதால் தங்கள் இடத்தின் அளவு குறித்து தெரியமால் தவித்து வருகின்றனர்.

தொகுப்பு வீடு

சுற்றியுள்ள இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருவதால், மழைக் காலங்களில் இவர்கள் வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கும் நிலை உள்ளதால் சேறும், சகதியும் மாறி வீட்டிற்கு செல்ல முடியாத நிலை உள்ளது. பட்டா இல்லை என்பதால் வேறு வழி இல்லமால் சிலர் வெளியூர் சென்ற நிலையில், மீதமுள்ளவர்களும் கிராமத்தினை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.

காலம் காலமாக மண் வீட்டில் வசித்து வந்த தங்களுக்கு அரசு தொகுப்பு வீடு கொடுத்து, மின் இணைப்பு, தண்ணீர் வசதி செய்து கொடுத்துள்ளது. தற்பொழுது வரை வீட்டு தீர்வை செலுத்தி வருகிறோம். ஆனால் பட்டா வழங்கவில்லை. இதனால் அருகில் இருப்பவர்கள் இடங்களை ஆக்கிரமிப்பு செய்து நெருக்கடி செய்யும் நிலை இருப்பதாகவும், இது குறித்து கேட்டால் பட்டா கேட்கிறார்கள்.

பட்டா கேட்டு பலமுறை மனு கொடுத்தும், அரசு தரப்பில் இருந்து இதுவரை எவ்வித பதிலும் இல்லை, தனது தாய் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த போதிலும், சட்டப்படி தான் தாங்கள் மனு அளித்து வந்தாகவும், எனவே அரசு தங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகிறார் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ள முத்துமுருகன்.

ஓட்டு வீடு

அருகில் இருப்பவர்கள் இடத்தினை ஆக்கிரமிப்பு செய்து நெருக்கடி கொடுக்கும் நிலை இருப்பதாகவும், மழைகாலங்களில் வீடுகளுக்கு செல்வதற்கு சிரமமாக இருப்பதாகவும், அரசு தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும், தான் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் போது, கையெழுத்து போட சொல்வர்கள், போடுவேன். மற்றபடி தனக்கு எதுவும் தெரியாது. தங்களுக்கு பட்டா வழங்க மட்டும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள்.

3 குடும்பத்தினர் காலம் காலமாக குடியிருந்து வருகின்றனர். அரசும் தொகுப்பு வீடு கட்டி கொடுத்துள்ளது. ஆனால் பட்டா வழங்கவில்லை, 20 ஆண்டுகளாக மனு கொடுத்தும் தற்பொழுது வரை அரசு பட்டா வழங்க நடவடிக்கை இல்லை, இதனால் அருகில் இருப்பவர்கள் இடத்தினை ஆக்கிரமிப்பு செய்து வருவதால், அந்த குடும்பத்தினர் ஊரை விட்டு வெளியேற வேண்டிய நிலையில் உள்ளனர். எனவே அரசு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் சமூக ஆர்வலர் வரதராஜன்.

பட்டா இன்றி தவிக்கும் அருந்ததியர் சமூக மக்கள்

இது குறித்து எட்டயபுரம் தாசில்தார் ஐயப்பனிடம் கேட்ட போது, இது பற்றி தனக்கு தெரியாது என்றும், கிராம நிர்வாக அலுவலர் மூலம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரை தொடர்பு கொண்டு கேட்ட போது, தான் பொறுப்பு ஏற்று 15 நாள்கள் தான் ஆகிறது. விசாரணை நடத்தவதாக தெரிவித்துள்ளார்.

Must Read : வாக்காளருக்கு கவரிங் நகை கொடுத்து ஏமாற்றிய வேட்பாளர்!

பல தலைமுறையாக வசித்து வந்தும் பட்டா இல்லை என்ற காரணத்தினால், 20 ஆண்டுகளாக போரடி வரும் அந்த குடும்பங்களுக்கு அரசு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அந்த குடும்பங்கள் கிராமத்தினை விட்டு வெளியேறுவதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Kovilpatti, Patta