Akshaya Tritiya 2021 | அட்சய திருதியை: ஊரடங்கால் வெறிசோடிய கோவில்பட்டி நகைக்கடைகள்

Youtube Video

கொரோனா ஊரடங்கால் இரண்டாவது ஆண்டாக அட்சய திருதியை வணிகம் தடைபட்டதால், கோவில்பட்டியில் நகைகடை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தொழிலை நம்பியுள்ள 5 ஆயிரம் நகைப்பட்டறை தொழிலாளர்கள் தங்களுடைய வாழ்வாதரத்தை இழந்துள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்...

  • Share this:
    அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், குடும்பத்தில் செல்வம் கொழிக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால், அட்சய திருதியை அன்று குண்டுமணி தங்கமாவது வாங்கி விட எண்ணுவதால், வாடிக்கையாளரை கவரும் வகையில் பல்வேறு சலுகைகளை நகைக் கடைகள் அறிவிக்கும்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் சுமார் 100-க்கும் மேற்பட்ட நகைகடைகள் உள்ளன. பொதுவாக அட்சய திருதியைக்கு ஒரு வாரத்திற்கு முன்பே மக்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் நகைக்கடை பஜார் களை கட்டும். ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.

    கோவில்பட்டியில் உள்ள நகைகடைகளை நம்பி கம்பி பட்டறை, டை பட்டறை, ஹால்மார்க் கடை என 600-கும் மேற்பட்ட பட்டறைகள் உள்ளன. இத்தொழிலில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். ஊரடங்கால் இத்தொழில் மீண்டும் முடங்கியுள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    மேலும் படிக்க...  ஒரு மாத சம்பளத்தை கொரோனா நிதியாக வழங்கிய காவலாளி - முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டு

    அட்சய திருதியை முன்னிட்டு, இரண்டு மாதங்களுக்கு முன்பே ஆர்டர்கள் வந்து குவியும் என்று, நகை பட்டறை தொழிலாளர்கள் கூறுகின்றனர். கடந்த ஆண்டு ஏற்பட்ட பாதிப்பில் இருந்து, இந்த ஆண்டாவது மீண்டு விடலாம் என்று எண்ணியிருந்த நிலையில், தற்போதைய ஊரடங்கால் தங்கள் எதிர்காலமே கேள்விக்குறியானதாக கவலை தெரிவிக்கின்றனர்.

    அட்ச திருதியை முன்னிட்டு பெரும் நகரங்களில் ஆன் லைன் மூலம் முன்பதிவு செய்து தங்க பொருட்கள் வாங்கப்படுகின்றன. ஆனால், கோவில்பட்டி போன்ற சிறு நகரங்களில் ஆன்லைன் மூலம் தங்கம் வாங்க, விற்க பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. மேலும், கடைகளில் சென்று விரும்பிய நகைகயை வாங்குவது போன்று, ஆன்லைனில் கிடைக்காது என குடும்பத் தலைவிகள் கூறுகின்றனர்.
    அட்சய திருதியை அன்று தங்கப் பொருள் வாங்குவது ஐதீகம் என்ற போதும், அதன் மூலமாக பல லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெற்று வந்தனர். ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக தங்க வர்த்தகம் இன்றி, அதுசார்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதரம் கேள்விக்குறியாகி உள்ளது...

     

    செய்தியாளர்: மகேஷ்வரன், கோவில்பட்டி



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

     
    Published by:Vaijayanthi S
    First published: