3வது முறையாக அதிமுக மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி தொடரும் - அமைச்சர் கடம்பூர் ராஜு

3வது முறையாக அதிமுக மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி தொடரும் - அமைச்சர் கடம்பூர் ராஜு

அமைச்சர் கடம்பூர் ராஜூ

அதிமுக நிர்வாகிக்கு புதிய புல்லட் வாங்கி கொடுத்து உள்ளார். அந்த புல்லட்டை அமைச்சர் கடம்பூர் ராஜு, ஆரோக்கியராஜிடம் வழங்கினார்.

  • Share this:
3 வது முறையாக அதிமுக மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி தொடரும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த மாதம் 6ஆம் தேதி வாக்குப்பதிவின் போது புதுக்கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி மையம் அருகே அதிமுக நிர்வாகி ஆரோக்கியராஜ் மற்றும் அமமுக, திமுக நிர்வாகிகள் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆரோக்கியராஜ் புல்லட் தீ வைக்கப்பட்டது.  இந்த சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான கடம்பூர் ராஜு இன்று தனது சொந்த நிதியில் இருந்து அதிமுக நிர்வாகிக்கு புதிய புல்லட் வாங்கி கொடுத்து உள்ளார். அந்த புல்லட்டை அமைச்சர் கடம்பூர் ராஜு, ஆரோக்கியராஜிடம் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுகவின் தேர்தல் அறிக்கை மக்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக ஆட்சி மீண்டும் தொடர வேண்டும் என்பதற்காக மக்கள் வாக்களித்துள்ளனர். ஹாட்ரிக் வெற்றியாக 3 வது முறையாக அதிமுக மாபெரும் வெற்றி பெற்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி தொடர்கின்ற நிலை ஏற்படும்.

தேர்தல் நடைபெறும் போது கொரோனா தொற்று தமிழகத்தில் அதிகளவில் இல்லை. தேர்தல் நடைபெறாத மாநிலங்களில்தான் அதிகளவு தொற்று எண்ணிக்கை உள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தேர்தல் ஆணையம் கொடுத்த விதிமுறைகளை முறையாக கடைபிடிப்போம்.‌ காலத்தின் கட்டாயத்திற்காக ஆக்சிஜன் தயாரிப்பதற்காக ஸ்டெர்லைட்டை திறக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த முடிவு அரசு எடுத்த முடிவு கிடையாது, அனைத்துக் கட்சி கூட்டத்தின் வாயிலாக முடிவெடுக்கப்பட்டு தமிழக அரசு அதனை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது, ஆக்சிஜன் தயாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பழைய நிலையில் சிலர் தவறாக புரிந்து கொண்டு போராடினார்கள். முறையாக சொன்ன நேரத்தில் பலர் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். இனிமேல் அதனை விவாதிக்கக் கூடிய பொருளாக எடுத்துக் கொள்மால் இருப்பது நல்லது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
Published by:Esakki Raja
First published: