ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

VK Sasikala: சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுக கூட்டத்தில் தீர்மானம் - போலீசார் வழக்குப்பதிவு!

VK Sasikala: சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுக கூட்டத்தில் தீர்மானம் - போலீசார் வழக்குப்பதிவு!

சசிகலாவுக்கு ஆதரவாக தீர்மானம் - வழக்குப்பதிவு

சசிகலாவுக்கு ஆதரவாக தீர்மானம் - வழக்குப்பதிவு

கொரோனா விதிமுறைகளை மீறி ஆலோசனைக்கூட்டம் நடத்தியதாக ரூபம்.கே.வேலவன் உள்பட 80 பேர் மீது விளாத்திகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சசிகலாவிற்கு ஆதரவாக கூட்டம் நடத்திய அதிமுக நிர்வாகி உள்பட 80 பேர் மீது விளாத்திகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ரூபம்.கே.வேலவன் என்பவர் அதிமுக ஆலோசனைக்கூட்டம் என்ற பெயரில் ஆலோசனைக்கூட்டம் நடத்தி, அந்த கூட்டத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா மீண்டும் வர வேண்டும்,

அதிமுக தொண்டர்களை சசிகலா சந்திக்க இருப்பது வரவேற்க கூடியது, சசிகலாவுடன் பேசியவர்களை நீக்கப்படுவதற்கு கண்டிக்கத்தக்கது என்பது உள்ளிட்ட 11 தீர்மானங்களை நிறைவேற்றினார்.

Also Read:   துப்பாக்கி முனையில் சீக்கிய பெண்கள் கடத்தல்; கட்டாய மதமாற்றம் செய்து வயதானவர்களுக்கு திருமணம் செய்ததாக புகார்!

இந்த நிலையில் கொரோனா விதிமுறைகளை மீறி ஆலோசனைக்கூட்டம் நடத்தியதாக ரூபம்.கே.வேலவன் உள்பட 80 பேர் மீது விளாத்திகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆலோசனைக்கூட்டம், முன்னாள் அமைச்சர் மறுப்பு, வழக்கு பதிவு என அடுத்தடுத்த சம்பவங்களால் விளாத்திகுளம் பகுதியில் பரபரப்பு  ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதிமுக தொண்டர்களுடன் சசிகலா பேசும் ஆடியோ ஒரு பக்கம் பிரச்சினையை ஏற்படுத்தியதை தொடர்ந்து இதனை கண்டித்து அதிமுக சார்பில் மாவட்டங்கள் தோறும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  சசிகலாவுடன் பேசியவர்கள் அதிமுகவில் இருந்து தொடர்ந்து நீக்கப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். இருப்பினும் சசிகலா அதிமுக தொண்டர்களுடன் பேசி கொண்டு தான் இருக்கிறார். அதிமுக கட்சிக்குள்ளும் சசிகலா விவகாரம் பூதாகரமாக மாறியுள்ளது.

கோவில்பட்டி செய்தியாளர் மகேஷ்வரன்

Published by:Arun
First published:

Tags: ADMK, Police case, Sasikala, Tuticorin, Vilathikulam Constituency, VK Sasikala