தூத்துக்குடியில் நடந்த அதிமுக பிரச்சாரக் கூட்டத்தில் - சொப்பன சுந்தரி, வாயாசாமி பாடல்களுக்கு குத்தாட்டம் போட்ட நடனக்கலைஞர்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தூத்துக்குடி ஏவிஎம் திருமண மண்டபத்தில் பிரச்சாரம் செய்தாா். கட்சி தொண்டர்கள் வேட்பாளர்கள் என அனைவரும் மண்டபத்தில் இருக்கையில் அமர்ந்திருந்த நிலையில் தொண்டர்களை உற்சாகப்படுத்த கூடிய விதத்தில் எம்ஜிஆரின் திரைப்பட பாடல்களுக்கு ஆடல் பாடல் நடன நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.
அதே சமயம் ஓ .பன்னீர்செல்வம் வர கால தாமதம் ஆனது இதனையடுத்து தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் சொப்பன சுந்தரி, வாயாசாமி உள்ளிட்ட பாடல்களுக்கு குத்தாட்ட நிகழ்ச்சி ஆரம்பமானது. ஆட்டம் பாட்டத்தில் கூடியிருந்தவர்கள் நேரம் செல்வது தெரியாமல் வைத்த கண் வாங்காமல் பார்த்து ரசித்தனர்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.