தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரத்தில் முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைருவமான எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாள் விழா அதிமுக சார்பில் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர். செ.ராஜூ கலந்து கொண்டு அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.சின்னப்பன், நகர செயலாளர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் கடம்பூர்.செ.ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில் அதிமுகவில் நானும் ஒருவர் தான் கூறும் சசிகலா. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது இதனை தெரிவித்திருக்க வேண்டும். அதிமுகவிற்கு எதிராக அமமுகவை தேர்தலில் போட்டியிட அனுமதித்திருக்கக் கூடாது.. தடுத்து இருக்க வேண்டும் அல்லது சசிகலா வெளியே தலை காட்டாமல் இருந்திருக்க வேண்டும்.அது மட்டுமல்லாது கோவிலுக்கு செல்வதாக கூறி அமமுக வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிக்கு சசிகலா சென்றார்.
.சட்டமன்ற தேர்தலில் அமமுகவை போட்டியிடாமல் தடுத்திருந்தால் அதிமுக ஆட்சி அமைந்திருக்கும். தொண்டர்கள் அனைவரும் வரவேற்று இருப்பார்கள், ஆனால் மறைமுகமாக திமுக ஆட்சிக்கு வருவதற்கு தான் இவர்கள் உதவியது. சசிகலாவுக்கு காலம் கடந்த ஞானோதயம் வந்துள்ளது. இனி அதிமுகவில் அவரை இணைப்பது குறித்து எதிர்காலமும் கட்சித் தலைமைதான் முடிவு செய்யும் என்றார்
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.