உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்ட மனுக்களுக்கு தீர்வு கண்டதில் தமிழகத்திலே தூத்துக்குடி மாவட்டம் முதலிடத்தில் உள்ளதாக தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பி.கீதாஜீவன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டு மக்களின் குறைகளுக்கு உடனடியாக தீர்வு காணும் வகையில் செயல்படுத்தபடும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் தீர்வுகாணப்பட்டதில் இன்று 3,500 பேருக்கு 6 கோடியே 67 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.
Also Read எஸ்.பி.வேலுமணி வீட்டில் விறுவிறு ரெய்டு.. நெருக்கமானவருக்கு நெஞ்சுவலி
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ஐஏஎஸ் நிலையிலான அதிகாரி கண்காணிப்பில் இந்த திட்டத்தை தமிழக முதலமைச்சர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டத்தில் முதியோர் உதவிதொகை,விதவை உதவி தொகை, பசுமை வீடுகள் திட்டத்தில் வீடுகள் ஒதுக்கீடு, குடிசை மாற்று வாரியத்தில் இலவச வீடுகள் ஒதுக்கீடு என பல திட்டங்களுக்கு தீர்வு காணப்பட்டு வருகின்றன என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் 11 ஆயிரம் மனுக்களில் 72 சதவீதம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதில் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் முதலிடம் வகிப்பதாக கூறினார்.
Also Read: பப்ஜி விளையாட்டில் முன்விரோதம் - நண்பனை நம்பி சென்ற இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்
மக்களுக்கு இந்த ஆட்சியின் மீது ஏற்பட்டுள்ள நம்பிக்கையினால் எங்கே சென்றாலும் இத்திட்டத்தில் மனுக்கள் அளித்து வருகின்றனர். பட்டா மாறுதல்,பல ஆண்டுகளாக முதியோர் உதவிதொகை கிடைக்காதவர்கள் என ஏழழுஎளிய மக்கள் பலர் பயனடைந்துள்ளதாக அவர் கூறினார். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள பகுதிகள் உட்பட அனைத்து பகுதிகளிலும் தெருவிளக்கு அமைப்பதற்காக 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது விரைவில் பணிகள் நடைபெறும் என்று அவர் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வருமான வரித்துறையினர் முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் சோதனை நடத்துவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்த கருத்து குறித்து செய்தியாளர் கேட்டதற்கு, அரசியல் காழ்புணர்ச்சி என்றால் எல்லா அமைச்சர் வீட்டிலுமா சோதனை நடக்கிறது. யார் மீது புகார் இருக்கிறதோ அவர்கள் மீது சம்மந்தப்பட்ட துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதை அரசியல் காழ்புணர்ச்சி என்றால். 34 பேர் மீதுமா நடவடிக்கை எடுக்கிறார்கள் என்றாா்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : முரளி கணேஷ்
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, DMK, SP Velumani, Thoothukudi