ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்.-ஐ நீக்குவோம் - அதிமுக கூட்டத்தில் தீர்மானம் - பரபரப்பு

அதிமுக

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வத்தை அ.தி.மு.கவிலிருந்து நீக்குவோம் என்று அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர் இணைந்து நடத்திய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

  • Share this:
அதிமுக நிர்வாகிகளிடம் சசிகலா பேசும் விவகாரம் சர்சையை ஏற்படுத்தி அவருடன் பேசிய அதிமுக நிர்வாகிகள் நீக்கப்பட்டு வருகின்றனர். சசிகலாவிற்கு எதிராகவும் அதிமுக சார்பில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இன்று கூட சென்னையில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக்கூட்டத்தில் சசிகலா விவகாரம் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சென்னை அதிமுக தலைமை  அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்ற நிலையில் கோவில்பட்டியில் சில அதிமுக நிர்வாகிகள் அதிமுக ஆலோசனைக்கூட்டம் என்ற பெயரில் கூட்டம் நடத்தினர்.

அதிமுக வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் ஆறுமுகப்பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் கௌசல்யா, அதிமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் ரூபம்.கே.வேலவன் மற்றும் அமமுக நிர்வாகிகள் இந்த ஆலோசனைக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் சசிகலா மீண்டும் அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பு ஏற்க வேண்டும். சசிகலாவிடம் பேசியவர்களை நீக்கியதற்கு கண்டனம் தெரிவிப்பது, இதே போன்று நிர்வாகிகளை நீக்கினால் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரையும் தொண்டர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அதிமுகவில் இருந்து நீக்குவோம் என்று 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த தீர்மானங்களை வலியுறுத்தி அதிமுக தொண்டர்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம்


சென்னையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்ற அதே நாளில் கோவில்பட்டியில் சசிகலாவிற்கு ஆதரவாக கூட்டம் நடந்தப்பட்டு, அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகவும், சசிகலாவிற்கு ஆதரவாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிகழ்வு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Karthick S
First published: