தூத்துக்குடி திரையரங்கில் செண்டை மேள தாளம் முழங்க நடிகர் விஜய் படத்திற்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள `பீஸ்ட்' படத்திற்கு அவரது ரசிகர்களையும் தாண்டி அனைத்து தரப்பினர் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நேற்று இரவு முதலே திரையரங்குகள் திருவிழாக் கோலமாகக் காட்சியளித்தது. படத்தினை வரவேற்கும் விதமாக நடிகர் விஜய் ரசிகர்கள் பிரமாண்டமான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் SBT சினிமாஸ், லெட்சுமி மற்றும் சண்முகா திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. மேலும் 3 திரையரங்குகளில் உள்ள 5 ஸ்கீரினில் ரசிகர்கள் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து SBT சினிமாஸ் திரையரங்கில் பீஸ்ட் திரைப்படத்தை வரவேற்கு விதமாக நேற்று இரவு முதல் இன்று அதிகாலை 3 மணி வரை ரசிகர்கள் நடிகர் விஜய் திரைப்பட பாடல்களுக்கு இடைவிடாது தொடர்ந்து நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
நடிகர் ரஜினிகாந்த், அஜித்குமார் பாடல்களுக்கும் நடனமாடி மகிழ்ந்தனர். மேலும் செண்டை மேள தாளம் முழங்க நடிகர் விஜய் படத்திற்கு பாலாபிஷேகம் செய்தனர். செண்டை மேளம் அடிக்க வந்தவர்களும் ரசிகர்களுடன் இணைந்து ஆடி கலக்கினர்.இதனை தொடர்ந்து சில ரசிகர்கள் மெயின் ரோட்டில் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் கொடியை பிடித்தவாறு பைக் ரைடிலும் ஈடுபட்டனர்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.