7 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் கடத்தல்! மடக்கி பிடித்த புலனாய்வுத்துறை.. தூத்துக்குடியில் அரங்கேறிய சம்பவம்..
7 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் கடத்தல்! மடக்கி பிடித்த புலனாய்வுத்துறை.. தூத்துக்குடியில் அரங்கேறிய சம்பவம்..
சுமார் 12 டன் செம்மரக்கட்டைகள் கடத்தல்
Timber smuggled | தூத்துக்குடியிலிருந்து மலேசியாவுக்கு கடத்துவதற்காக மரப்பெட்டிகளில் (Pallets) மறைத்து எடுத்து வரப்பட்ட சுமார் 7 கோடி மதிப்புள்ள சுமார் 12 டன் செம்மரக்கட்டைகளை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் முறிமுதல் செய்துள்ளனர்
இரும்பு பைப்புகளை ஏற்றுமதி செய்வதற்காக வைத்திருந்த மரப்பெட்டிகளில் மறைத்து வைத்து சுமார் 12 டன் செம்மரக்கட்டைகள் கடத்தல். ரகசிய தகவலின் பேரில் தூத்துக்குடி சிப்காட் அருகில் புலனாய்வு அதிகாரிகள் சரக்குகளை ஏற்றி வந்த லாரியை மடக்கி பிடித்தனர்.
தூத்துக்குடியிலிருந்து மலேசியாவுக்கு கடத்துவதற்காக மரப்பெட்டிகளில் (Pallets) மறைத்து எடுத்து வரப்பட்ட சுமார் 7 கோடி மதிப்புள்ள சுமார் 12 டன் செம்மரக்கட்டைகளை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடியிலிருந்து மலேசியா போர்ட் கிலாங் துறைமுகத்திற்க்கு செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக பெங்களுர் வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தூத்துக்குடி சிப்காட் அருகில் உள்ள தனியார் சரக்கு பெட்டி முனையத்தில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையில் திருப்பூர், ராதாகிருஷ்ணன் நகர், பிச்சம் பாளையம் என்ற முகவரியில் உள்ள தனியார் நிறுவனம் இரும்பு பைப்புகளை ஏற்றுமதி செய்வதற்காக வைத்திருந்த மரப்பெட்டிகளை (Pallets) சோதனை செய்ததில் அதில் முன் பக்கத்தில் உள்ள பெட்டிகளில் மட்டும் இரும்பு குழாய்களை வைத்து பின்புறம் முழுவதும் செம்மரக்கட்டைகளை மறைத்து எடுத்து வந்தது தெரிய வந்ததையடுத்து, ஏற்றுமதிக்காக வைத்திருந்த 12 டன் எடையுடைய 9 மரப்பெட்டிகளை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக திருப்பூரை சேர்ந்த மோகன் குமார் என்பவரையும், சரக்குகளை ஏற்றி வந்த லாரி டிரைவரையும் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
Published by:Lilly Mary Kamala
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.