ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

திருச்செந்தூர் பகுதிகளில் 3வது நாளாக மின் வெட்டு - 8 மணி நேர மின்தடையால் மக்கள் அவதி

திருச்செந்தூர் பகுதிகளில் 3வது நாளாக மின் வெட்டு - 8 மணி நேர மின்தடையால் மக்கள் அவதி

மின் வெட்டு

மின் வெட்டு

Thoothukudi Power Cut : திருச்செந்தூர் சுறுவட்டார பகுதிகளில் 3 வது நாளாக நேற்றும் காலை முதல் தொடர் மின்வெட்டு ஏற்பட்டது, சுமார் 8 மணி நேர மின்தடையால் பொதுமக்கள், வியாபாரிகள் கடும் சிரமம் அடைந்தனர். இரவிலும் தொடர்ந்ததால் வீதிகளில் குழந்தைககளை பெற்றோர்கள் உறங்க வைத்தனர்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர்,  உடன்குடி மற்றும் ஆறுமுகநேரி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்றும் காலை முதல் தொடர் மின்வெட்டு இருந்தது. காலை முதல் இரவு வரையிலும் நாளொன்றுக்கு சுமார் 8 மணி நேரம் அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

  இந்த மின்வெட்டானது இரவு நேரங்களிலும் தொடர்ந்து வருவதால் திருச்செந்தூர், உடன்குடி சுற்றுவட்டாரப்பகுதிகளான பரமன்குறிச்சி,  நா.முத்தையாபுரம்,  கீழநாலுமூலைக்கிணறு,  தண்டுபத்து, மெஞ்ஞானபுரம்,  மற்றும் சிவலூர் உட்பட 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின.

  ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தொடர்ந்த மின்வெட்டினால்   குழந்தைகள் முதல்  பெரியவர்கள் வரை  கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர். கோடை காலம் என்பதால் வெய்யிலின் தாக்கம் கடுமையான அளவு இருந்து வரும் நிலையில், கிராமப்புறங்களிலும் போதிய காற்றோட்டம் இன்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

  கீழநாலுமூலைக்கிணறு கிராமத்தில் இரவிலும் தொடர்ந்த மின்வெட்டினால் வீடுகளில் இருக்க முடியாமல் வீதிகளில் மண்ணெண்ணெய் விளக்கு வைத்து குழந்தைகளை பெற்றோர்கள் பராமரித்தனர். மேலும் பச்சிளம் குழந்தைகளை உறங்க வைப்பதற்காக வீட்டு வாசல்களில்  படுக்கை விரித்து செல்போனில் வரும் சிறிய வெளிச்சத்தில், விசிறிவிட்டு குழந்தையை உறங்க வைக்கும்  அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

  Must Read : தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டுக்கு மத்திய அரசு காரணமா? அண்ணாமலை பதில்

  தேர்வு நெருங்கி வரும் நிலையில், இந்த திடீர் மின்வெட்டினால் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். செல்போன் வெளிச்சம் மற்றும் மண்ணெண்ணெய் விளக்கு ஒளியிலேயே  கல்வி பயின்று வரும் அவல நிலையில் இருந்துவருகின்றனர்.

  செய்தியாளர் - முரளி கணேஷ்.

  Published by:Suresh V
  First published:

  Tags: Power cut, Thiruchendur, Thoothukudi