ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நிலக்கரி தட்டுப்பாடு.. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3 யூனிட்டில் உற்பத்தி நிறுத்தம்

நிலக்கரி தட்டுப்பாடு.. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3 யூனிட்டில் உற்பத்தி நிறுத்தம்

தூத்துக்குடி

தூத்துக்குடி

Thoothukudi | நிலக்கரி பற்றாக்குறை காரணமாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மூன்று யூனிட்டில் உற்பத்தி நிறுத்தப்பட்டதால் 630 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில்  மொத்தமுள்ள 5 யூனிட்களில் தலா 210 மெகாவாட் வீதம் மொத்தம் 1050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக நிலக்கரி பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் முழுமையாக மின் உற்பத்தி நடைபெறவில்லை.

  இந்த நிலையில் இன்று நிலக்கரி பற்றாக்குறை காரணமாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது ஆகிய மூன்று யூனிட்டில் மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

  1வது மற்றும் 5வது யூனிட் களில் மட்டும் தற்போது மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு சுமாா் 60 ஆயிரம் டன் நிலக்கரி ஏற்றிக் கொண்டு கப்பல் தூத்துக்குடி துறைமுகம் வந்துள்ளது.  கப்பலில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்து பணிகள் நடைபெற்று வருகிறது.

  செய்தியாளர்: பி. முரளி கணேஷ் (தூத்துக்குடி)

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Coal, Coal importing, Deficit coal, Electricity, Tamil News, Tamilnadu, Thoothukudi