பெங்களுரில் இருந்து நண்பர்களுக்காக ரயிலில் மதுபாட்டில்களை பதுக்கி கொண்டு வந்த 3 பேர் கைது!

பெங்களூரில் இருந்து நண்பர்களுக்காக மதுபாட்டில் பதுக்கி வந்த 3 பேர் கைது.

மைசூர் - தூத்துக்குடி ரெயிலில் வந்த பயணிகளிடம் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை நடத்தினர்.

  • Share this:
பெங்களுரில் இருந்து நண்பர்களுக்காக ரயிலில் மதுபாட்டில்களை பதுக்கி கொண்டு வந்த கோவில்பட்டியை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 37 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. எனினும், வெளி மாநிலங்களில் இருந்து மது பாட்டில்கள் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை போலீசார் தடுத்து வருகின்றனர். இந்நிலையில் ரயில் மூலமாக மது பாட்டிகள் கடத்தப்படுவதாக வந்த தகவலை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ரயில் நிலையங்களில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

Also read: வேலையிழந்த உதவி பேராசிரியர்: கூலிக்கு பனைமரம் ஏறி நுங்கு வெட்டும் போது தவறி விழுந்து உயிரிழந்த சோகம்!!

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரயில்வே நிலையத்தில் இன்று மைசூர் - தூத்துக்குடி ரெயிலில் வந்த பயணிகளிடம் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கோவில்பட்டி பாரதி நகரைச் சேர்ந்த மாரிச்செல்வம் (26), வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த மணிகண்டன்(20), கடலையூரைச் சேர்ந்த பேச்சிமுத்து (32) ஆகிய 3 பேரின் பைகளை சோதனை செய்ய போது அதில் 7 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 37 மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையெடுத்து ரயில்வே போலீசார் அவர்கள் 3 பேரையும்  அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களையும் கோவில்பட்டி மது விலக்கு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதன் பின்னர், அவர்கள் 3 பேரையும் மதுவிலக்கு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பெங்களுருவில் வேலைக்காக சென்று விட்டு ஊருக்கு கிளம்பிய போது, கோவில்பட்டியில் உள்ள நண்பர்கள் இவர்கள் 3 பேரை தொடர்பு கொண்டு தமிழகத்தில் டாஸ்மாக் திறக்கவில்லை, மது கிடைப்பதில் சிரமமாக உள்ளது. எனவே மது வாங்கி வரும் படி கூறியுள்ளனர். அதன்படி, நண்பர்களுக்காக பெங்களூரில் இருந்து மது வாங்கி பதுக்கி கொண்டு வந்தபோது, போலீசாரின் பிடியில் சிக்கியதாக கைது செய்யப்பட்ட 3 பேரும் தெரிவித்துள்ளனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Esakki Raja
First published: