தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் கடற்கரை பகுதியில் இருந்து நாட்டுப்படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற 20 கோடி ரூபாய் மதிப்பிலான போதைபொருள் பறிமுதல்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள வேம்பார் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா, ஹெராயின் உள்ளிட்ட போதை பொருள்கள் மற்றும் விரலி மஞ்சள் ஆகியவை அடிக்கடி விசைபடகுகள் மூலமாக கடத்துவதும், அதனை போலீசார் தடுத்து நிறுத்தி, பறிமுதல் செய்துவதும் வாடிக்கையாக உள்ளது. தொடர்ந்து இதுபோன்ற கடத்தல் நடைபெறுவதால் வேம்பார் கடற்கரை பகுதியில் போலீசார் தீவிர காண்கணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றிரவு கடற்கரை பகுதியில் சந்தேகப்படும் படி நபர்கள் இருப்பதாக க்யூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையெடுத்து க்யூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயாஅனிதா தலைமையிலான தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக ஒரு நாட்டுப்படகு கிளம்புவதை பார்த்த போலீசார் விரைந்து சென்றனர். அவர்களை பார்த்தும், அந்த நாட்டுப்படகு அதிவேகமாக கடலுக்கு செலுத்த தொடங்கியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்கள் விசைப்படகு மூலமாக அந்த படகினை துரத்தியுள்ளனர்.
Also Read: பீர் வாங்குவதில் தகராறு.. இளைஞரை அடித்துக்கொன்று நாடகமாடிய நண்பர்கள்.. நடந்தது என்ன?
ஒரு கட்டத்தில் நாட்டுப்படகு இருளில் சென்று மறைந்தது. போலீசார் படகைக் கண்டுபிடிக்க ஜிபிஎஸ் கருவியின் உதவியை நாடினர். ஜிபிஎஸ் கருவி மூலம் நாட்டுப்படகு இருக்கும் இடத்தை துல்லியமாக கண்டறிந்தனர். விளக்குகள் அணைக்கப்பட்ட நிலையில் நடுக்கடலில் மிதந்து கொண்டிருந்த நாட்டுப்படகை சுற்றி வளைத்து பிடித்தனர். பரிசோதனை செய்ததில் 10 கிலோ கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன் என்ற போதை பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இலங்கைக்கு கடத்தி சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து நாட்டுப்படகில் இருந்த கீழ வைப்பார் பகுதியை சேர்ந்த கிங்கப்பன், சிலுவை, அஸ்வின், வினிஸ்டன், சுபாஷ், கபிலன், சிப்பிகுளத்தினை சேர்ந்த சைமன் ஆகியபேரை கைது செய்து போதை பொருள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய நாட்டுபடகு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Also Read: தேவர் மகன் பட இயக்குனரின் மனைவியும் பழம்பெரும் நடிகையுமான லலிதா காலமானார்...
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போதைப்பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட இருதயவாஸ் என்பவர் குறித்த தகவல் கிடைத்தது. இந்த கடத்தல் கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டு வந்த இருதயவாஸ் சொந்தமாக இரண்டு நாட்டு படகுகள் வைத்து மீன்பிடி தொழில் செய்வது போல நடித்து வந்துள்ளார். ஆனால் வெளி உலகிற்கு தெரியாமல் போதைப்பொருள் கடத்தல் மாஃபியாவாக செயல்பட்டு வந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இவர் கடத்தலில் நேரடியாக ஈடுபடாமல் அப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு பணம் கொடுத்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுத்தி வந்துள்ளார். பிடிபட்டவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கடத்தல் மன்னன் இருதயவாஸ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட 10கிலோ கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன் போதை பொருள் மதிப்பு உலக சந்தையில் ரூ 20 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Drug addiction, Police, Seized, Tuticorin