Home /News /tamil-nadu /

ஆண்களுடன் பழகாதே..! கண்டித்த தாயை கொலை செய்த 17வயது சிறுமி - தூத்துக்குடியில் பயங்கரம்

ஆண்களுடன் பழகாதே..! கண்டித்த தாயை கொலை செய்த 17வயது சிறுமி - தூத்துக்குடியில் பயங்கரம்

தூத்துக்குடி கொலை

தூத்துக்குடி கொலை

Tuticorin தூத்துக்குடியில் 17 வயது சிறுமி நண்பர்களுடன் சேர்ந்து தனது தாயை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஆண் நண்பர்களுடன் பழகாதே என கண்டித்த தாயை  நண்பர்களுடன் சேர்ந்து  கொலை செய்த 17 வயது சிறுமி உள்ளிட்ட இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

    தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட  வண்ணார் 2வது தெருவில் வசித்து வருபவர்  முனியலட்சுமி, இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவனைப் பிரிந்து ஒரு ஆண்டுகளாக மூன்று பிள்ளைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் முனியலட்சுமியின் 17 வயது மகள் அப்பகுதியில் உள்ள ஆண் நண்பர்களுடன் தொடர்ந்து பேசியதாக கூறப்படுகிறது. தாய் முனியலட்சுமி ஆண்களிடம் பழகுவதை கண்டித்து உள்ளார்.

    Also Read: ஆசிரியரின் பாலியல் தொல்லையால் தற்கொலைக்கு முயன்ற பள்ளி மாணவி - வேலூரில் அதிர்ச்சி சம்பவம்

    ஆண் நண்பர்களுடன் பேசுவதை  தாய் கண்டித்ததால் ஆத்திரத்தில் அவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.  நேற்று காலை  முனிய லட்சுமி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது தன் ஆண் நண்பர்களை வீட்டிற்கு அழைத்த சிறுமி  தூங்கி கொண்டிருந்த தனது தாயை ஆண் நண்பர்களுடன் சேர்ந்து கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். தனது இரண்டு ஆண் நண்பர்கள் சென்றதும் காவல்துறைக்கு போன் செய்த சிறுமி தனது தாயை யாரோ கொலை செய்து விட்டனர் என தெரிவித்து உள்ளார்.

    இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தென்பாகம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட போது தனது தாயை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியையும் ஆண் நண்பர் கண்ணனை கைது செய்த போலீசார். இந்த கொலை தொடர்பாக தங்கம், கோடா ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.

    செய்தியாளர்: பி. முரளி கணேஷ் (தூத்துக்குடி)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Crime News, Death, Illegal affair, Murder, Police, Tamil News, Thoothukudi, Tuticorin

    அடுத்த செய்தி