குப்பையில் கிடக்கும் 1 கோடி மதிப்பிலான பேட்டரி வாகனங்கள் - நடவடிக்கை எடுக்குமா கோவில்பட்டி நகராட்சி

பழுதான பேட்டரி வாகனம்

குப்பை அள்ள வாங்கிய வாகனங்கள் குப்பையில் கிடப்பதாகவும், பேட்டரி வாகனங்களை பராமரிப்பு செய்வதில் அதிகாரிகள் தயக்கம் காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

  • Share this:
ஒரு கோடி ரூபாய் வரை செலவு செய்து குப்பைகளை அகற்ற வாங்கப்பட்ட பேட்டரி வாகனங்கள் குப்பையில் கிடக்கும் அவலம் பிரதமர், உச்சநீதிமன்ற வரை புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்காத கோவில்பட்டி நகராட்சி அலுவலகம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியில் சுமார் 1 கோடி ரூபாய் வரை செலவு செய்து குப்பைகளை அகற்றுவதற்காக வாங்கப்பட்ட 52 பேட்டரி வாகனங்களில் 44 வாகனங்கள் பேட்டரி, டயர்கள் இல்லாமலும், அப்பளம் போல் நொறுக்கி ஓரங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரதமர், உச்சநீதிமன்றம் வரை புகார் அனுப்பியும், நீதிமன்றத்தில் உறுதி அளித்த பின்னரும் பேட்டரி வாகனங்களை சரி செய்து இயக்குவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், இதில் உள்ள முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேட்டரி வாகனம்


Also Read: லட்சங்களை போட்டு கோடிகளை அள்ளலாம் - பங்குசந்தை ஆசைக்காட்டி கோடிகளை சுருட்டிய மோசடி கும்பல்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி பகுதியில் உள்ள 36 வார்டுகளில் ஏராளமான குறுகலான தெருக்கள் உள்ளன. போதுமான சாலை வசதிகள் இல்லாத காரணத்தாலும் சுற்றுசூழல் மாசுபடுவதை தடுக்கும் வகையில் மத்தியரசின் தூய்மை இந்தியா, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் சிறிய ஆட்டோ வடிவிலான  பேட்டரியில்  இயங்கக்கூடிய 52 வாகனங்கள் வாங்கப்பட்டன. ஒரு பேட்டரி வாகனம்  1,85 ,096 ரூபாய் மதிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வாங்கப்பட்டன. இந்த பேட்டரி வாகனங்கள் 6 மாதம் மட்டும் நன்றாக ஓடியது. பின்னர் பேட்டரி வாகனங்கள் பழுது என்று ஓரங்கட்டப்பட்டன. அவ்வப்போது பழுதான வாகனங்கள் சரி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் தற்பொழுது 52 வாகனங்களில் 8 வாகனங்கள் மட்டுமே செயல்பட்டில் உள்ளன. மற்ற 44 வாகனங்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளன.

பேட்டரி வாகனம்


கோவில்பட்டி பழைய நகராட்சி அலுவலகம், புதிய நகராட்சி அலுவலகம், பசுவந்தனை சாலையில் உள்ள பூங்கா பகுதியில் குப்பை கிடங்கு போல பேட்டரி வாகனங்கள் காட்சி பொருளாக மாறியுள்ளது. பல வாகனங்களில் டயர்கள், டோர்கள் மற்றும் பேட்டரிகள் என எதுவும் இல்லாமல் உள்ளது. சில பேட்டரி வாகனங்கள் அப்பளம் போல காட்சியளிக்கிறது. குப்பைகளை அகற்ற வாங்கப்பட்ட வாகனங்கள் தற்பொழுது குப்பையில் கிடக்கும் அவல நிலையில் உள்ளது.

இதற்கிடையில் சமூக ஆர்வலர் முருகன் என்பவர் மக்கள் வரிபணத்தில் வாங்கப்பட்ட இந்த பேட்டரி வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் அலுவலகம், உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆகியவற்றிக்கு புகார் மனு அனுப்பினார். இதையெடுத்து இந்தாண்டு ஜனவரி மாதம் உயர்நீதிமன்ற மதுரை கிளை முருகன் மனு மீது விசாரணை நடத்த தூத்துக்குடி மாவட்ட நீதிபதிக்கு அறிவுறுத்தியது.

இதனை தொடர்ந்து கோவில்பட்டி சார்பு நீதிமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மக்கள் நீதமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்த நகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் ஒரு மாதகாலத்திற்குள் சரி செய்து அனைத்து பேட்டரி வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர். ஆனால் தற்பொழுது வரை அதனை இயக்குவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பேட்டரி வாகனத்தில் அவல நிலை


குறுகிய தெருக்களில் தள்ளுவண்டி மூலமாக குப்பைகள் பெறுவதற்கு சிரமம் மற்றும் காலதாமம் ஏற்படும் என்பதால் பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டன. தற்பொழுது 8 வாகனங்கள் தான் ஓடுகிறது. மற்றவைகள் குப்பையில் கிடப்பதாகவும், பேட்டரி வாகனங்கள் பழுது என கூறி ஈரோட்டில் இருந்து ஒருவரை  அழைத்து வந்து பழுது பார்க்கின்றனர். ஆனால் பழுது பார்த்த மறுநாள் அந்த வாகனங்கள் இயங்குவதில்லை என்றும், எனவே பேட்டரி வாகனங்களை பழுது பார்க்க நகராட்சி அலுவவலக வளாகத்தில் பழுது நீக்கம் மையம் அமைத்து பேட்டரி வாகனங்களில் ஏற்படும் பழுதுகளை பார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Also Read: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கிற்கு காலக்கெடு - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பிரதமர் ,நீதிமன்றம் வரை புகார் தெரிவித்த சமூக ஆர்வலர் முருகன் கூறும் போது, 52 வாகனங்களில் தற்பொழுது வெறும் 8 வாகனங்கள் மட்டும் தான் செயல்படுவதாகவும், இது குறித்து புகார் தெரிவித்ததும் ஒரு மாதத்தில் அனைத்தும் சரி செய்யப்பட்டு அனைத்து வாகனங்களும் இயக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால் தற்பொழுது வரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.

குப்பை அள்ள வாங்கிய வாகனங்கள் குப்பையில் கிடப்பதாகவும், பேட்டரி வாகனங்களை பராமரிப்பு செய்வதில் தயக்கம் காட்டும் அதிகாரிகள், டீசல் வாகனங்களை பரமரிப்பு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஏனெனில் அந்த வாகனங்களின் பராமரிப்பு செலவு, டீசல் வாங்குவது என அதில் முறைகேடாக பணம் பார்க்க முடியும், ஆனால் பேட்டரி வாகனங்களில் அது போன்று செய்ய முடியாது என்பதால் பேட்டரி வாகனங்களை பரமரிப்பு செய்ய ஆர்வம் காட்டுவதில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

கோவில்பட்டி நகராட்சியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள பேட்டரி வாகனங்கள்


இது குறித்து நகராட்சி ஆணையர் கிருஷணமூர்த்தியிடம் கேட்ட போது பழுதான வாகனங்களின் பழுது நீக்குவதற்கு எவ்வளவு பணம் செலவு ஆகும் என்று கணக்கீடு செய்யப்பட  அறிவுறுத்தியுள்ளதாகவும், அந்த விபரங்கள் வந்தததும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது பற்றி நகராட்சி சுகாதார பிரிவு ஊழியர்களிடம் கேட்ட போது பேட்டரிகள் பழுதுகியுள்ளதாகவும், ஒரு பேட்டரி வாங்க 55 ஆயிரம் செலவு ஆகும் என்றும், தற்பொழுது போதுமான நிதி இல்லாத காரணத்தினால் அவை பரமரிப்பு செய்யப்படவில்லை என்று கூறுகின்றனர்.

சுற்றுசுழலை பாதுகாப்பதற்காகவும், நகரில் குப்பைகளை வாங்குவதற்காக சுமார் 1 கோடி ரூபாய் வரை செலவு செய்து வாங்கப்பட்ட பேட்டரி வாகனங்கள் குப்பையில் கிடப்பது போல ஓரங்கட்டுப்பட்டுள்ளது அனைவரையும் வேதனையடை செய்துள்ளது மட்டுமின்றி, மக்களின் வரி பணம் வீணாடிக்கப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: