ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கே.எஸ்.அழகிரியை கண்டித்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்... தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் அதிரடி அறிவிப்பு!

கே.எஸ்.அழகிரியை கண்டித்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்... தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் அதிரடி அறிவிப்பு!

கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி

கடந்த 15ந்தேதி சத்தியமூர்த்தி பவனில் நடந்த பிரச்சனையை தொடர்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கே.எஸ்‌ அழகிரியை கண்டித்து காங்கிரஸ் கட்சியிலிருந்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் ராஜினாமா செய்துள்ளார்.

  காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவராக இருப்பவர் காமராஜ். அவர் இன்று கோவில்பட்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சித் தேர்தல் ஜனநாயக ரீதியாக நடைபெறவில்லை என்றும், பணம் வாங்கிக் கொண்டு பொறுப்புக்கள் போடப்பட்டுள்ளதாகவும், மாவட்ட தலைவர்களுக்கு தெரியாமல், கலந்து ஆலோசிக்கமால் பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும்,

  இதையும் படிங்க | மாணவி பிரியா பெயரில் பாஜக சார்பில் ஃபுட்பால் போட்டி: அண்ணாமலை

  கடந்த 15ந்தேதி சத்தியமூர்த்தி பவனில் நடந்த பிரச்சனை தொடர்பாக மாவட்ட தலைவர்களிடம் எவ்வித ஆலோசனை நடத்தாமல், கட்சியின் பொருளாளர் ரூபி மனோகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளனர்.

  ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டது கண்டித்து ஒரு அறிக்கை கூட மாநில தலைவர் வெளியிடவில்லை.  மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தன்னுடைய கோரிக்கை மட்டும் பெரிது என்று நினைக்கிறார்.

  கட்சி வளர்ச்சி தொடர்பாக கேட்க வரும் கட்சி தொண்டர்களை அடிக்கும் நிலை காங்கிரஸ் கட்சியில் உள்ளது.

  எனவே காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் பதவியில் தான் தொடர விரும்பவில்லை என்றும், தனது ராஜினாமா தொடர்பாக மாநிலத் தலைவருக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Congress, KS Alagiri, Thoothukudi