• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தூத்துக்குடியில் யாரையும் போராட்டத்துக்கு தூண்டக் கூடாது: மாவட்ட நிர்வாகம்

தூத்துக்குடியில் யாரையும் போராட்டத்துக்கு தூண்டக் கூடாது: மாவட்ட நிர்வாகம்

ஸ்டெர்லைட் ஆலை

ஸ்டெர்லைட் ஆலை

ஸ்டெர்லைட் ஆலை வளாகப்பகுதி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் 1500 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

  • Last Updated :
  • Share this:
தூத்துக்குடியில் யாரையும் போராட்டத்துக்கு தூண்டக் கூடாது என பல்வேறு அமைப்பினருடன் அரசு நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், சட்டத்தை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்ற தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு தூத்துக்குடி நகரில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இன்று தூத்துக்குடியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை வளாகப்பகுதி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் 1500 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பலத்த சோதனைக்குப் பிறகே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. ஸ்டெர்லைட் ஆலையினை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு சட்டசபையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட், நாம் தமிழர் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் ஆட்சியரை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

First published: