தூத்துக்குடியில் வெற்றியை நோக்கி கனிமொழி!

Thoothukkudi 2019 Lok Sabha Elections Result: அதிமுக கூட்டணி வாக்குகள், பாஜக வாக்குகள் என்று தமிழிசை பக்கமும் வாக்கு வங்கி பலமாக உள்ளதால், இருவருக்கும் கடும் போட்டி இருக்கக்கூடும்.

தூத்துக்குடியில் வெற்றியை நோக்கி கனிமொழி!
கனிமொழி | தமிழிசை
  • News18
  • Last Updated: May 23, 2019, 1:25 PM IST
  • Share this:
மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுவரும் நிலையில், தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி வெற்றிப்பாதையில் இருக்கிறார்.

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் முக்கிய வேட்பாளர்களாக திமுக சார்பில் கனிமொழியும் பாஜக சார்பில் தமிழிசை சவுந்திரராஜனும் போட்டியிட்டார்கள். ஆளுமை மிகுந்த இரு பெண் அரசியல் தலைவர்கள் போட்டியிட தூத்துக்குடி தொகுதி தேர்தல் காலத்தில் மிகவும் பரபரப்பாகக் காணப்பட்டது.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு, 13 பேர் பலியான துயரம், தாது மணல் கொள்ளை, தாமிரபரணி பிரச்னை, உப்பளத் தொழிலாளர் பிரச்னை, மீனவர் பிரச்னை எனப் பல சிக்கல்கள் நிறைந்திருந்த தொகுதியில் வேட்பாளர்கள் வெற்றிக்காகக் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது.


திமுக-வுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டிருந்தாலும் அமமுக, மநீம ஆகிய கட்சிகள் திமுக-வின் வாக்குகளைப் பிரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்றே கூறப்பட்டது.

ஆனால், தமிழகத்தில் பாஜக மீதான எதிர்ப்பலை இத்தேர்தலில் திமுக-வுக்கு ஆதரவாக செயல்பட்டதால் இம்முறை தூத்துக்குடியில் திமுக வேட்பாளரான கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன.

கணிப்புகளின் படி கனிமொழி, தொடக்கம் முதலே முன்னிலை வகித்து வருகிறார். 3வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் கனிமொழி 87358 வாக்குகள் பெற்றுள்ளார்.பாஜக வேட்பாளர் தமிழிசை 28918 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். 58440 வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி முன்னிலையில் இருக்கிறார்.

First published: May 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்