• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • விருத்தாசலம் மாணவி கொலைக்கும், விசிகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: திருமாவளவன்

விருத்தாசலம் மாணவி கொலைக்கும், விசிகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: திருமாவளவன்

திருமாவளவன் MP

திருமாவளவன் MP

மாணவி கொலை குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும்,  இது ஆணவ கொலையாக இருக்க வாய்ப்புள்ளது என்றும் திருமாவளவன் தெரிவித்தார்

  • Last Updated :
  • Share this:
விருத்தாசலத்தில் கல்லூரி மாணவி திலகவதி கொலை செய்யப்பட்டதற்கும்,  விடுதலை சிறுத்தை கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் அருகே சேத்தியாத்தோப்பில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு எதிராக பாமக அவதூறு பரப்புவதாகவும், தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ் அவதூறு பரப்பினால், அவர் மீது நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடரப்போவதாகவும் தெரிவித்தார்.

மேலும், மாணவி கொலை குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும்,  இது ஆணவ கொலையாக இருக்க வாய்ப்புள்ளது என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.

இந்த கொலைச் சம்பவத்தைக் கண்டித்து வருகிற 14 ந் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் விருத்தாசலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Yuvaraj V
First published: