ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

10 % இடஒதுக்கீடு தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் - தொல்.திருமாவளவன்!

10 % இடஒதுக்கீடு தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் - தொல்.திருமாவளவன்!

திருமாவளவன்

திருமாவளவன்

இந்திரா சஹானி வழக்கில் 9 நீதிபதிகள் கொண்ட தீர்ப்பை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு மாற்ற முடியாது என அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  முன்னேறிய சமூகத்தினருக்குரிய 10 % இடஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என நாடளுமன்ற எம்.பியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

  இது குறித்து விசிக கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தனத் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு தரும் பாஜக அரசின் சட்டம் செல்லுபடியாகும் என்ற தீர்ப்பு, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான தீர்ப்பாகும் எனவும், இது நீதியின் பெயரால் இழைக்கப்பட்ட உச்சபட்ச அநீதியாகும் எனவும் விமர்சித்துள்ளார்.

  மேலும், இந்த வழக்கு பல நாட்களாக கிடப்பில் இருந்தபோது, தலைமை நீதிபதியாக யு.யு.லலித் வந்த பிறகு தான் விசாரணைக்கு எடுக்கப்பட்டது என குறிப்பிட்ட அவர், இந்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்காமல் தொடர செய்தபோதே உச்ச நீதிமன்றம் இதை ரத்து செய்யாது என்பது தெரிந்துவிட்டது என குறிப்பிட்டார். மேலும் இந்துக்கள் அனைவரும் ஒன்று என பேசிக்கொண்டே, மற்ற பிரிவினருக்கு எதிராக இருக்கும் இந்த சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலமே, பாஜக அரசு, முன்னேறிய சாதியினருக்கு மட்டுமே செயல்படும் அரசாக இருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும் என தெரிவித்துள்ளார்.

  Also Read : உயர்வகுப்பு இட ஒதுக்கீடு; உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூக நீதி மீதான தாக்குதல் - ராமதாஸ் கண்டனம்

  மேலும், இந்த சட்டம் செல்லாது என தீர்ப்பளித்த நீதிபதிகளும், பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கலாம் என கூறியுள்ளனர். இதுவும் சமூக நீதிக்கு எதிரானதே என குறிப்பிட்டுள்ளார். மேலும், மற்ற பிரிவினரிலும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் உள்ளனர். இதில் அவர்கள் பங்கேற்க முடியாமல் செய்வதும் சமத்துவ கோட்பாட்டிற்கு எதிரானது என்ற விசிக வழக்கறிஞரின் வாதத்தை அடிப்படையாக கொண்டே தமது தீர்ப்பை அந்த இரு நீதிபதிகளும் மாற்றியமைத்தனர் என குறிப்பிட்டார்.

  50%- க்கு மேல் இடஒதுக்கீடு இருக்கக்கூடாது என்று இந்திரா சஹானி வழக்கில் 9 நீதிபதிகள் கொண்ட தீர்ப்பை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு மாற்ற முடியாது என சுட்டிக்காட்டிய திருமாவளவன், இந்த தீர்ப்பை எதிர்த்து, கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு இந்த வழக்கை  அனுப்ப வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்தார். மேலும், பிற கட்சிகளும் இதில் இணைய கோரிய அவர், இடஒதுக்கீடு பிரச்சனையை தீர்க்க முடியாது, முதலில் அதை அரசியல் களத்தில் தீர்க்க வேண்டும் அதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

  இதை ஆதரிக்கும் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகளும் தங்கள் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தோழமையுடன் கேட்டுக்கொள்வதாகவும் அறிக்கையில் தெரிவித்தார்.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: BJP, Reservation, Supreme court judgement, Thirumavalavan