Home /News /tamil-nadu /

’தந்தை பெரியார் மீதும் திராவிட அரசியல் மீதும் வெறுப்பைப் பரப்புபவர்களின் வேலையிது.. குற்றவாளிகளை தண்டியுங்கள்’ - தொல்.திருமாவளவன்

’தந்தை பெரியார் மீதும் திராவிட அரசியல் மீதும் வெறுப்பைப் பரப்புபவர்களின் வேலையிது.. குற்றவாளிகளை தண்டியுங்கள்’ - தொல்.திருமாவளவன்

தொல் திருமாவளவன், எம்.பி.,

தொல் திருமாவளவன், எம்.பி.,

பெரியார் தமிழ் இனத்தின் தலைவர். அவரை அவமதிப்பதாகக் கருதி தங்களுக்கே அவமரியாதை செய்து கொள்கிறார்கள்!" என்று பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு கண்டன,ம் தெரிவித்துள்ளார் திமுக தலைவர் மு.க ஸ்டாலின்.

    ’மத, சாதியவாத, இனவாத, பரிசுத்தவாத, மூடநம்பிக்கை குழுக்கள், தந்தை பெரியார் மீதும், திராவிட அரசியல் மீதும் வெறுப்பை பரப்புவதற்காக செய்யும் நாச வேலை இது. விடுதலை சிறுத்தைகள் கட்சி இச்செயலை வன்மையாக கண்டிக்கிறது. குற்றவாளிகளை தண்டியுங்கள்’ என பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்தும், குற்றவாளிகளை தண்டிக்குமாறு முதலமைச்சர் பழனிசாமியை கேட்டுக்கொண்டுள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன்.

    மேலும், ”தமிழக அரசே, பெரியார்சிலையை அவமதித்த சமூகவிரோதிகளைக் #குண்டர்தடுப்புக்_காவலில் சிறைப்படுத்து. உடனே பிணை வழங்காமல் வழக்கை விரைந்து நடத்தி தண்டனை வழங்கும் வகையில் நடவடிக்கை எடு. தயக்கம் காட்டி அமைதிகாப்பதன் மூலம் சனாதன கும்பலுக்குத் துணை போகாதே! நன்றிக்கடன் மறவாதே!” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    இந்த விவகாரம் குறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், ’தேசியப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட அனைத்து சட்டங்களின்படியும் மிகக்கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டாக தலைவர்களின் சிலைகளை அவமதிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இத்தகைய நிகழ்வுகளைத் தடுக்க உளவுத்துறை இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.



    இனாம்குளத்தூர் சமத்துவபுரம் வளாகத்தில் பெரியாரின் உருவச் சிலையை அவமதித்தவர்களை கைது செய்து மிகக்கடுமையான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். அது தமிழகத்தில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் சிதைக்க முயல்வோருக்கு மறக்க முடியாத பாடமாக அமைய வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    "ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்வதால் மேலும் மேலும் புறக்கணிக்கப்படுவோம் என்பதை இவர்கள் எப்போது புரிந்து கொள்வார்கள்? திருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டிக்கிறேன்! பெரியார் தமிழ் இனத்தின் தலைவர். அவரை அவமதிப்பதாகக் கருதி தங்களுக்கே அவமரியாதை செய்து கொள்கிறார்கள்!" என்று பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு கண்டன,ம் தெரிவித்துள்ளார் திமுக தலைவர் மு.க ஸ்டாலின்.
    Published by:Gunavathy
    First published:

    Tags: Dr Ramadoss, MKStalin, Periyar, Periyar samathuvapuram, Periyar Statue, Thirumavalavan, Thol. Thirumavalavan

    அடுத்த செய்தி