Home /News /tamil-nadu /

இந்த ஆண்டின் அகால சம்பவம்... ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சுர்ஜித்!

இந்த ஆண்டின் அகால சம்பவம்... ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சுர்ஜித்!

ஆழ்துளை கிணற்றில் சுர்ஜித்

ஆழ்துளை கிணற்றில் சுர்ஜித்

  • News18
  • Last Updated :
    ஆழ்துளை கிணற்றில் விழுந்து சிறுவன் சுர்ஜித் உயிரிழந்த சம்பவமே இந்த ஆண்டின் அகால சம்பவம் ஆகும்.

    மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் கடந்த அக்டோபர் 27-ம் தேதி மாலை 5.30 மணிக்கு இரண்டு வயது சுஜித் தனது வீட்டின் அருகில் இருந்த ஆள்துளை கிணற்றில் விழுந்தான்.

    சிறுவனை மீட்பதற்காக அரசின் சார்பில் இடைவிடாது மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பேரிடர் மேலாண்மைத்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சுஜித்தைக் காப்பாற்றப்பட வேண்டிய முயற்சிகளை களத்தில் நின்று முன்னெடுத்தனர்.

    ரிக் இயந்திரத்தில் தோண்டப்பட்ட குழியில் மீண்டும் போர்வெல் இயந்திரத்தால் துளையிடும் பணி நடைபெற்று வந்தது. 82 மணிநேரத்திற்கும் மேலாக 61 அடிக்கு குழி தோண்டப்பட்ட நிலையில், நள்ளிரவு 2 மணிக்கு பிறகு தோண்டும் பணி நிறுத்தப்பட்டது. சில நிமிடங்களுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், குழந்தை சுஜித் உயிரிழந்ததாக தெரிவித்தார்.

    இதையடுத்து சுர்ஜித்தின் உடல் அழுகிய நிலையில் ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட சுர்ஜித்தின் உடல் கரட்டுப்பட்டி அருகே பாத்திமாபுதூர் கல்லறைத் தோட்டத்திற்கு கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்பு நல்லடக்கம் செய்யப்பட்டது.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: YearEnder 2019

    அடுத்த செய்தி