முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 113 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பெய்துள்ளது - வானிலை ஆய்வு மையம் தகவல்

113 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பெய்துள்ளது - வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை

மழை

இது கடந்த 122 ஆண்டுகளில் மூன்றாவது அதிக சதவீத மழை அளவாகும் என தெரிவித்தார். 1906 ஆம் ஆண்டில் 112 செ.மீட்டர் மழை, 1909ம் ஆண்டு 127 செ.மீ மற்றும் 2022ல் 93 செ.மீ மழை பதிவாகியுள்ளது என குறிப்பிட்டார். இதுவே கடந்த 113 ஆண்டுகளில் பதிவாகியுள்ள அதிக மழை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதியில் இயல்பை விட 93% அதிகமாக மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டியளித்தார். தமிழ்நாட்டில், திருநெல்வேலி, நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை காலத்தில் 100% க்கும் அதிக மழை அளவு பதிவாகியுள்ளது என குறிப்பிட்டார்.

கடந்த ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில், தென்மேற்கு பருவமழை 40 செ.மீட்டர் அளவு பதிவாகியுள்ளது எனவும் இந்த அளவு கடந்த ஆண்டைவிட 88 சதவீதம் அதிகம் எனவும் குறிப்பிட்டார்.

இது கடந்த 122 ஆண்டுகளில் இது மூன்றாவது அதிக சதவீத மழை அளவாகும் என தெரிவித்தார். 1906 ஆம் ஆண்டில் 112 செ.மீட்டர் மழை, 1909ம் ஆண்டு 127 செ.மீ மற்றும் 2022ல் 93 செ.மீ மழை பதிவாகியுள்ளது என குறிப்பிட்டார். இதுவே கடந்த 113 ஆண்டுகளில் பதிவாகியுள்ள அதிக மழை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்க: காவிரியில் வெள்ளப் பெருக்கு.. கரையோர பகுதிகளை சூழந்த வெள்ளம்.. குடிநீர் இன்றி பொதுமக்கள் அவதி

கடந்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழையும் ஒரு மாவட்டத்தில் மிக கனமழையும் பதிவாகியுள்ளது என குறிப்பிட்ட அவர், நாகை மாவட்டம் திருக்குவளையில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது என தெரிவித்தார்.

வட தமிழ்நாடு மற்றும் கடலோரப் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் என தகவல் தெரிவித்துள்ளார். மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் கள்ளக்குறிச்சி, தர்மபுரி உள்ளிட்ட வட தமிழ்நாடு மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Chennai rains, South west Monsoon rain, Tamilnadu, Weather News in Tamil