முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழ்நாட்டில் ஒரே ஆண்டில் பிடிபட்ட 31 போலி மருத்துவர்கள்

தமிழ்நாட்டில் ஒரே ஆண்டில் பிடிபட்ட 31 போலி மருத்துவர்கள்

 மருத்துவர் - மாதிரிப்படம்

மருத்துவர் - மாதிரிப்படம்

தமிழகத்தில் இந்த ஆண்டு மட்டும் 31 போலி மருத்துவர்கள் பிடிப்பட்டுள்ளனர்.

  • Last Updated :

2009ம் ஆண்டு முதல் எம்பிபிஎஸ் படிக்காமல் மருத்துவராகவோ, அல்லது சித்தா ஆயுர்வேதா, ஹோமியோபதி படித்த மருத்துவர்கள் அலோபதி முறையில் சிகிச்சை வழங்கினாலோ அவர்களை கண்டறிந்து அவர்கள் மீது சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில் மொத்தம் 157 போலி மருத்துவர்கள் சுகாதாராத்துறையின் பிடியில் சிக்கினர். 2009ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை 1,725 போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இவர்கள் பெரும்பாலும் ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே சிகிச்சை வழங்கி வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவிக்கிறது. இந்த ஆண்டு முதல் அலோபதி படிக்காத மருத்துவர்கள் அலோபதி சிகிச்சை வழங்கினால் அவர்கள் பதிவு செய்திருக்கும் சித்தா மருத்துவ கவுன்சில், யுனானி மருத்துவ கவுன்சில், ஹோமியோபதி கவுன்சில் என சம்பந்தப்பட்ட கவுன்சிலில் தெரிவித்து. அவர்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு ஒரு சித்த மருத்துவர், ஒரு ஹோமியோபதி மருத்துவர், இரண்டு யுனானி மருத்துவர்கள் அலோபதி சிகிச்சை வழங்கியதற்காக பிடிபட்டுள்ளனர். இந்த நான்கு பேர் குறித்து சம்பந்தப்பட்ச கவுன்சிலில் புகார் அளிக்கப்பட்டு அவர்களின் அங்கீகாரம் இரண்டு ஆண்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் யாரேனும் பிறரை ஏமாற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும். இந்திய தண்டனை சட்டம் பிரிவு 419, 420 என்ற பிரிவின் கீழ் தான் போலி மருத்துவர்கள் மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

top videos

    இதற்கு பதிலாக clinical establishment சட்டத்தின் போலி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சரத்துகள் ஏற்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறை அரசுக்கு பரிந்துரை வழங்கியுள்ளது. மேலும் பதிவு செய்யப்படாத கிளினிக் வைத்திருந்தால் அபராதமாக பெறப்படும் தொகையை ரூ.50 ஆயிரத்திலிருந்து அதிகபட்சமாக 5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளது.

    First published:

    Tags: Doctors