Home /News /tamil-nadu /

பாமக வேட்பாளர்கள் வெற்றி பெற்று மேயர் பதவி ஏற்றதும் முதல் கையெழுத்து இதற்கு தான்... அன்புமணி ராமதாஸ் உறுதி!

பாமக வேட்பாளர்கள் வெற்றி பெற்று மேயர் பதவி ஏற்றதும் முதல் கையெழுத்து இதற்கு தான்... அன்புமணி ராமதாஸ் உறுதி!

உங்களுக்கு என்ன வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். திமுக மற்றும் அதிமுகவோ அவர்களுக்கு என்ன வேண்டுமோ அதை திணிப்பார்கள் என்று அவர் கூறினார்.

    அதிமுகவும், திமுகவும் மாறி மாறி குறை சொல்லி வருகின்றனர். ஆனால் பாமக அதற்கு தீர்வு தரும் கட்சியாக உள்ளது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

    காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள வணிகர் வீதியில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் அக்கட்சியின் இளைஞர் அணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

    அப்போது அவர் பேசியதாவது, நகர்மன்ற தேர்தல் மிக முக்கியமான தேர்தல், இந்தியாவில் மூன்று அடுக்கு தேர்தல் உள்ளன. சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலை விட மக்களிடம் நேரடியாக தொடர்பில் உள்ள உள்ளாட்சி மன்றம் மிக முக்கியமானது.

    பாமக வேட்பாளர்கள் வெற்றி பெற்று காஞ்சிபுரத்தில் மேயர் பதவி ஏற்றவுடன் முதல் கையெழுத்து, காஞ்சிபுரம் மாநகரில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடும் உத்தரவாக தான் இருக்கும்.

    இதையும் படிங்க: பரோட்டா தயாரித்து, தெலுங்கில் வாக்கு சேகரித்த பாஜக மாநில பொறுப்பாளர்

    அதிமுக, திமுக மாறி மாறி குறை சொல்லி வருகின்றனர். ஆனால் பாமக அதற்கு தீர்வு தரும் கட்சியாக உள்ளது. அண்ணாவை வைத்து கட்சி நடத்தி டாஸ்மாக் கடையை நடத்தி வருகின்றனர். அண்ணாவின் கனவு மது விளக்கு அதனால் பாமகவிக்கு வாய்ப்பு தாருங்கள் அண்ணாவின் கனவை நிறைவேற்றுவோம்.

    காஞ்சிபுரம் நகரத்தை மாடல் சிட்டியாக மாற்றுவோம், பிற நகரங்களுக்கு காஞ்சிபுரம் நகரத்தை எடுத்துக்காட்டாக மாற்றுவோம் என தெரிவித்தார்.

    இதையும் படிங்க: தேர்தல் நேரத்தில் முதல்வர் திட்டங்களை மட்டுமே அறிவிக்கிறார்: செயல்படுத்துவதில்லை - சீமான் குற்றச்சாட்டு

    மேலும், உங்களுக்கு என்ன வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். திமுக மற்றும் அதிமுகவோ அவர்களுக்கு என்ன வேண்டுமோ அதை திணிப்பார்கள். உண்மையான முன்னேற்றம் வேண்டும் என்றால் மாம்பழம் சின்னத்தில் வாக்கு செலுத்தி பாமகவை வெற்றி பெற செய்யுங்கள் என்று அவர் கூறினார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Anbumani ramadoss, PMK

    அடுத்த செய்தி