விசில் அடித்தால் வரும்... பழம் கொடுத்தால் உண்ணும்...! தினமும் மான்களின் பசியைப் போக்கும் கூலித் தொழிலாளி

விசில் அடித்தால் வரும்... பழம் கொடுத்தால் உண்ணும்...! தினமும் மான்களின் பசியைப் போக்கும் கூலித் தொழிலாளி
News18
  • News18
  • Last Updated: December 4, 2019, 11:25 AM IST
  • Share this:
சென்னையை சேர்ந்த் கூலி தொழிலாளியான சுதாகர் அன்றாடம் மான்களுக்கு உணவளித்து, அதன் பசியைப் போக்கி வருகிறார்.

கிடைத்ததைப் பகுத்துக் கொடுத்துத் தானும் உண்டு, பல உயிர்களையும் காப்பாற்றுதல், தலை சிறந்த அறம் என்கிறது திருக்குறள். நாய், பூனை, குருவி என பல்வேறு வகையான விலங்குகளுக்கு உணவளிக்கும் நபர்களை பார்க்கிறோம். ஆனால் சென்னையை சேர்ந்த சுதாகர் வித்யாசமாக மான்களுக்கு உணவளித்து வருகிறார்.

அரசுப் பண்னை பகுதியில் வசிக்கும் இவருக்கு வயது 38. அருகில் உள்ள golf மைதானத்தில் பந்தை எடுத்துக்கொடுப்பது போன்ற கூலி வேலை செய்கிறார். நாளொன்றுக்கு 200-500 ரூபாய் வருமானம் கிடைக்கும் நிலையில், இவர் கடந்த 25 ஆண்டுகளாக இங்கு பணியாற்றி வருகிறார். Golf மைதானத்திற்கும், ஒய்.எம்.சி.ஏ மைதானத்திற்கு இடையே பெரிய மைதானம் போன்ற இடம் உள்ளது. இந்த இடத்தில் மான்கள் இருக்கிறது என்பது பலரும் எதிர்பார்க்காத ஒன்று.


சரியாக 4 மணிக்கு தன் வேலைகளை முடித்துவிட்டு, கையில் காய்கறி, பழங்கள், வறுக்கி, பிஸ்கட் உள்ளிட்ட திண்பண்டளோடு அந்த பகுதிக்கு வந்து விசில் அடிக்கிறார். அந்த சத்தத்தை கேட்டதும் புதரில் இருந்த மான்கள் மெதுவாக வெளியே வருகிறது. இவரை கண்டதும் உற்சாகமாகவும், தைரியமாகவும் வெளியே வருகிறது. இவர் தான் கொண்டுவந்துள்ள பழம், காய்கறிகளை மான்களுக்கு அளிக்கிறார். மான்கள் வந்து சாப்பிட்டு விட்டு, மீண்டும் புதருக்குள் செல்கிறது.

சுதாகரை தவிர வேறு எந்த நபர்களை பார்த்தாலும், வேறு எந்த சத்தத்திற்காகவும் மான்கள் வெளியே வருவதில்லை. சுதாகர் விசில் அடித்தால் மட்டுமே வருவது அங்குள்ள மக்களை ஆச்சர்யப்படுத்துகிறது. கடந்த 3 ஆண்டுகளாக மழை, வெயில் என எத்தகைய இக்கட்டான சூழலிலும் தவறாமல் மான்களுக்கு உணவளித்து வருகிறார். நாளொன்றுக்கு 200 ரூபாய் வரை இதற்காக செலவழிக்கிறார். வேலை இல்லாத நாட்களில் கடன் வாங்கி செலவளிக்கிறார்.

இதுகுறித்து சுதாகர் கூறுகையில், இந்த பகுதியில் நாய்கள் தொந்தரவு உள்ளதால், மான்கள் குட்டி போட்டால் வனத்துறைக்கு தெரிவித்து, ஒப்படைத்து விடுவேன். சென்னையில் வெள்ளம் வந்த போது நிறைய மான்கள் காணாமல் போய்விட்டது. மழை இல்லாத வறட்சியான நாட்களில் குடத்தில் தண்ணீர் கொண்டு வந்து மான்களுக்கு குடிக்க கொடுப்பேன்.இங்குள்ள மான்களை தன் குழந்தைகள் போல் பார்ப்பதாகவும், மான்கள் என்னிடம் மட்டும் அன்பாக இருப்பது அளவு கடந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.
First published: December 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading