இது பெரியார் பூமி பாஜகவின் வேலைகள் இங்கே பலிக்காது, திராவிட முன்னேற்ற கழகம் என்றும் இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு சார்பில் சென்னை ராயப்பேட்டை நியூ காலேஜ் ஆடிட்டோரியத்தில் திருவல்லிக்கேணி இஸ்லாமிய பெருமக்கள் மற்றும் ஜமாத்தார்கள் ரமலான் இஃப்தார் நிகழ்ச்சியில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் செஞ்சி மாஸ்தான், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது, நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இஸ்லாமியர்களுக்கும் ஆன உறவு கழகம் தோன்றிய காலத்திலிருந்து இருந்து கொண்டிருக்கிறது. 1967 ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைப்பதற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தவர்கள் இஸ்லாமியர்கள், அரசியலை தாண்டிய ஒரு கொள்கை உறவு.
முதுகில் அழுக்கு உள்ளவர்கள் தான் மோடிக்கு பயப்படுவார்கள்.. நாராயணசாமி ஆவேசம்..
1989 கலைஞர் தலைமையில் ஆட்சியில்தான் சிறுபான்மைக்கென தனி ஆணையம் அமைத்தது, 2007ம் ஆண்டு 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியது, உள்ளிட்டவற்றை உதயநிதி ஸ்டாலின் பட்டியலிட்டார். மதச்சார்பற்ற, சமூக நலனுக்காக போராடக் கூடிய ஒரே இயக்கம் திராவிட முன்னேற்றக் கழக இயக்கம். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக முதலமைச்சர் அவர்கள் பிரம்மாண்ட பேரணி நடத்தி இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தார்.
மத்திய அரசு பல மாநிலங்களில் இஸ்லாமியருக்கு எதிராக தூண்டி வருகிறது. டெல்லியில் அசைவம் சாப்பிட கூடாது என்று மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இஸ்லாமியர்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பது கூட மத்திய அரசு நினைக்கிறது. எந்த உடை அணிய வேண்டும் என்பது தனிமனித உரிமை அதிலும் மத்திய அரசு தலையிடுகிறது. உணவு, உடை, வீடு கல்வி அனைத்து உரிமைகளும் மத்திய அரசு பறிக்கப்படுகிறது.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழியில் தற்போது நமது முதலமைச்சர் ஒரு நல்லாட்சி வழங்கி வருகிறார். மத ஒற்றுமை மத நல்லிணக்கத்துக்காக என்றென்றும் நாம் பாடுபடுவோம்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக முதன்முதலில் குரல் கொடுத்தது திமுக தான், இளைஞரணி செயலாளராக பதவி ஏற்றவுடன் அதை கிழித்து எறிந்து முதன்முதலில் கைதானேன். இது பெரியார் பூமி பாஜகவின் வேலைகள் இங்கே பலிக்காது திராவிட முன்னேற்ற கழகம் என்றும் இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: DMK, Udhayanidhi Stalin