மக்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாத பட்ஜெட் இது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.
2022-23ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் கடந்த 2019ம் ஆண்டு முதல் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். அந்த வகையில், நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 4வது பட்ஜெட் இது ஆகும். கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் காகிதமில்லா டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் டிஜிட்டல் கரன்சி, வேலைவாய்ப்பு, நதிநீர் இணைப்பு, சாலை வசதி , விவசாயம், கல்வி , டிஜிட்டல் பேங்கின், ஏழை மக்களுக்கு வீடு, 5ஜி சேவை உட்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தது.
அதேவேளையில், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் மாத ஊதியம் பெறுவோர் பெரிதும் எதிர்பார்த்த வருமான வரி விலக்கு உச்சவரம்பு குறித்த அறிவிப்பு எதுவும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. இது அவர்கள் மத்தியில் ஏமாற்றமாக அமைத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க;
தேசிய தொலை மனநல மருத்துவத் திட்டம் - பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
இந்நிலையில், மத்திய அரசின் பட்ஜெட்டை ஜிரோ பட்ஜெட் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், மோடி அரசாங்கத்தின் ஜிரோ பட்ஜெட். மாத சம்பளம் வாங்குபவர்கள், நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள்மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், சிறு குறு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆகியோருக்கு பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை’ என்று தெரிவித்திருந்தார்.
இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மக்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாத பட்ஜெட் இது.
பொருளாதார நசிவால் வாழ்வாதாரத்தை இழந்த ஏழை மக்களுக்கான திட்டங்கள், வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம், சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மேம்பட உதவி என எதிர்பார்த்த அம்சங்கள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது" என்று கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.