மணிக்கு 25ஆயிரம் லிட்டர் மழைநீர் சேமிப்பு... வறட்சியிலும் வாழும் சென்னை அப்பார்ட்மெண்ட்..!

'மழை பெய்யும் போது அதை முறையாக சேமித்தால் எப்போதும் தண்ணீருக்குப் பிரச்னை இருக்காது'.

மணிக்கு 25ஆயிரம் லிட்டர் மழைநீர் சேமிப்பு... வறட்சியிலும் வாழும் சென்னை அப்பார்ட்மெண்ட்..!
சபரி டெரஸ் அப்பார்ட்மென்ட் (Image- Harsha Koda)
  • News18
  • Last Updated: August 24, 2019, 1:51 PM IST
  • Share this:
சென்னையை தண்ணீர்ப் பஞ்சம் மிரட்டி வரும் வேளையில் மழைநீரை சேமித்து செழிப்புடன் வாழ்கிறார்கள் சபரி டெரஸ் அப்பார்ட்மென்ட் குடியிருப்பு வாசிகள்.

சென்னையில் குறிப்பாக ஓஎம்ஆர் பகுதியில் குடிக்கக்கூட தண்ணீர் இன்றி ஐடி அலுவலகங்கள், உணவு விடுதிகள், குடியிருப்புப் பகுதிகள் காலியாகி வருகின்றன. இந்த இக்கட்டான சூழலிலும் தண்ணீர் பஞ்சமா? ஓஎம்ஆர் பகுதியிலா? என வியக்கின்றனர் சபரி டெரஸ் அப்பார்ட்மென்ட் வாசிகள். காரணம், அங்கு செயல்படுத்தப்பட்டுள்ள மழைநீர் சேமிப்புத் திட்டம்.

வளாகத்தில் மழைநீரை சேமிக்க பைப் லைன்.



மழைநீர் சேமிப்பு என்றால் மழைநீரை நிலத்தடிக்குள் சேர்ப்பது இல்லை. முறையான சேமிப்பு முறைகள் மூலம் நமது அன்றாடத் தேவைக்குப் பயன்படுத்துவதும்தான் என்கின்றனர் சபரி டெரஸ் குடியிருப்புச் சங்க நிர்வாகிகள் ஆன ஹர்ஷா கோடா- பிரபா கோடா தம்பதியினர்.

ஹர்ஷா கோடா- பிரபா தம்பதியர்


தங்களது அன்றாடத் தேவைக்கு மழைநீரை எப்படிச் சேகரித்து பயன்பெறுகிறார்கள் என கோடா தம்பதியர் பேசுகையில், “கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் மழை வெள்ளம் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. அப்போதுதான் எவ்வளவு மழைநீரை நாம் தேவையில்லாமல் வீணடித்து பின்னர் கோடை காலத்தில் குடிக்கக்கூட தண்ணீரில்லாமல் தவிக்கிறோம் என யோசித்தோம். மழை பெய்யும் போது அதை முறையாக சேமித்தால் எப்போதும் தண்ணீருக்குப் பிரச்னை இருக்காது.இதற்காகத்தான் சபரி டெரஸ் குடியிருப்பு வளாகத்தின் மொட்டை மாடியில் விழும் மழைநீரை, பைப் அமைத்து ஒரு டேங்க்-ல் சேமிக்கத் தொடங்கினோம். மழை பெய்தால் ஒரு சதுர அடிக்கு ஒரு மணி நேரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் கிடைக்கிறது. சமீபத்தில் பெய்த மழையின்போது ஒரு மணி நேரத்தில் 25 ஆயிரம் லிட்டர் மழைநீரை எங்களால் சேமிக்க முடிந்தது.



இதேபோல், அனைவரும் அவரவர் வீடுகளில் மழைநீரை உங்களது அன்றாட உபயோகத்துக்கு சேமித்துப் பயன்படுத்தலாம். பெரும் செலவோ பராமரிப்போ கிடையாது. மழை காலத்துக்கு முன்னர் மாடி, டேங்க ஆகியவற்றை சுத்தப்படுத்தி வைப்போம், அவ்வளவுதான்” என்கின்றனர் இத்தம்பதியினர்.

ஓஎம்ஆர் குடியிருப்பு வாசிகள் நலச்சங்க செயலாளராகவும் உள்ள ஹர்ஷா கோடா, “குடியிருப்புவாசிகளை இத்திட்டத்துக்கு ஒப்புக்கொள்ள வைக்க பெரிய சிரமம் ஏதும் ஏற்படவில்லை. ஒரு மழையில் சேமித்த நீரின் அளவைக் காட்டினோம். ஆயிரக்கணக்கில் தண்ணீருக்கு செலவு செய்துகொண்டிருக்கும் சூழலில் இத்திட்டத்துக்கு அனைவரும் ஆதரவுதான் அளித்தனர். இதுபோல் மழைநீரை சேமிக்க நினைக்கும் அனைவருக்கும் நாங்கள் உதவியும் செய்து வருகிறோம்” என்றார்.

மேலும் பார்க்க: தண்ணீர்ப் பஞ்சத்தைத் தீர்க்கும் கல்வாழை - மழைநீர் சேமிப்பில் அசத்தும் மதுரை இளைஞர்..!
First published: July 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்