Home /News /tamil-nadu /

திருவொற்றியூர் எம்எல்ஏ சங்கர் கட்சி பதவி பறிப்பு! - திமுக தலைமை அதிரடி

திருவொற்றியூர் எம்எல்ஏ சங்கர் கட்சி பதவி பறிப்பு! - திமுக தலைமை அதிரடி

துரைமுருகன், கே.பி. சேகர்

துரைமுருகன், கே.பி. சேகர்

கே.பி. சங்கர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி வருவதால்  திருவொற்றியூர் திமுக மேற்குப் பகுதிக் கழகச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

    சென்னை திருவொற்றியூர் திமுக எம்.எல்.ஏ கே.பி. சங்கர் கட்சி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

    சென்னை திருவொற்றியூர் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் கே.பி.சங்கர். இவர் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். சீமானை எதிர்த்து போட்டியிட்டு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் திமுக திருவொற்றியூர் மேற்கு பகுதி கழகச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி. சங்கர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி வருவதால்  திருவொற்றியூர் திமுக மேற்குப் பகுதிக் கழகச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    சென்னை திருவொற்றியூரில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சிப் பொறியாளரை திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.சங்கரும், அவரது ஆதரவாளர்களும் நேற்று முன் தினம் தாக்கியுள்ளனர். சாலை பணிகளை அமைக்க வந்த 13 லாரிகளில் வந்த தார்-ஜல்லிக் கலவையையும் திருப்பி அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளுங்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ இப்படி அடாவடி செயல்களில் ஈடுபடுலாமா? மக்கள் பிரதிநிதியே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது ஏற்க முடியாது என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தது. பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இந்த சம்பவத்தில் எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியிருந்தார்.

    Also Read: மாநகராட்சி இன்ஜினியரை தாக்கிய திமுக எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    இந்நிலையில் தான் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறியதால் அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக நிர்வாகிகளிடம் விசாரித்த போது, கே.பி.சங்கரின் சகோதரர் கே.பி.பி.சாமி திமுக மீனவர் அணி செயலாளராக இருந்தவர். திருவொற்றியூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். தமிழக மீன்வளத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

    இவர் 2020-ல் மறைந்ததையடுத்து 2021 சட்ட மன்றத்தேர்தலில் கே.பி.சங்கருக்கு திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட ஸ்டாலின் வாய்ப்பு கொடுத்தார். எம்.எல்.ஏவான பிறகு அவர் கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட விவகாரங்களில் ஈடுபடுவதாக அறிவாலயத்துக்கு புகார்கள் பறந்தது. கட்சியினரும் இவர் மீது அதிருப்தியில் இருந்தனர். இந்நிலையில்தான் மாநகராட்சி இஞ்சினியரை எம்.எல்.ஏ கே.பி சங்கரும் அவரது ஆதரவாளர்களும் தாக்கிய செய்தி வெளியானதும் அவரது கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ளது எனக் கூறினர்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: DMK, MLA, Politics, Thiruvotriyur

    அடுத்த செய்தி