நாயன்மார்களால் பாடல்பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோயில், சப்தவிடங்க தலங்களில் தலைமையானதாகும். மேலும், தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 87 ஆவது சிவத்தலமாகும். இந்த ஆண்டு பங்குனி உத்திரப் பெருவிழாவுக்கு பெருமைசேர்க்கும் திருவிழா, ஆழித் தேரோட்டம். ஆசியாவிலேயே மிகப் பெரிய தேர் என்ற சிறப்புக்குரிய ஆழித் தேரில், ஆரூரர் அமர்ந்து உலா வரும் திருக்காட்சி, கண்கொள்ளா காட்சியாக இருக்கும். ஆழித்தேரோட்ட விழாவை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் முன்னின்று நடத்தியிருப்பதும், அதனை சுந்தரர் கண்டு பரவசப்பட்டிருப்பதாகவும் வரலாறுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், திருவாரூர் தியாகராஜர் கோயிலில், பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித் தேரோட்டம், இன்று காலை 7:30 மணி அளவில் தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் சாந்தா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி ஆகியோர், தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். 96 அடி உயரமும், 400 டன் எடையும் கொண்ட பிரமாண்ட தேரை, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து செல்கின்றனர்.
மேலும் படிக்க... Horoscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்! (மார்ச் 25, 2021)
பக்தர்கள் விண்ணதிர பக்தி முழக்கம் எழுப்பினர். ஆசியாவின் மிகப்பெரிய தேர் என்ற பெருமையை கொண்ட, திருவாரூர் ஆழித்தேர், பக்தி வெள்ளத்தில் அசைந்தாடி வருகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்