காரைக்கால் மாவட்டம் பூவம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி வயது 37. அவர், வாய் பேச முடியாமலும் காது கேட்க முடியாத மாற்றுத் திறனாளி ஆவார். இவர் நேற்று மாலை நாகை மாவட்டம் வவ்வாலடியில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்குச் செல்வதற்காக குட்டியானை வண்டியில் வந்த அவர், வழி தெரியாததால் திருவாரூர் மாவட்டம் கங்களாஞ்சேரியில் இறக்கிவிடப்பட்டார்.
இந்த நிலையில், சாந்தி சுமார் 10 பவுன் தங்க நகைகளை அணிந்து இருந்ததைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் சாந்தியின் நிலையை உணர்ந்து திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். அவரை மகளிர் காவல் துறையினர் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு, திருவாரூரில் உள்ள ஒரு தனியார் காப்பகத்தில் நேற்று இரவு சாந்தியை தங்க வைத்தனர்.
இதனிடையே சாந்தி குறித்து முகநூலில் உள்ள திருவாரூர் மாவட்ட காவல்துறை பக்கத்தில் காவல்துறையினர் புகைப்படத்துடன் தகவல்களைப் பகிர்ந்தனர்.
Also read: சிகப்பாக பிறந்த குழந்தைகள்: சந்தேகப்பட்டு மனைவியைக் கொலை செய்த கணவன்
இதனை சாந்தியின் சொந்த ஊரான பூவம் பகுதி மக்கள் பார்த்துள்ளனர். உடனடியாக சாந்தியின் உறவினர்களுக்குத் தகவல் கொடுத்ததன் அடிப்படையில் சாந்தியின் சகோதரி இன்று திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வந்து தகவல்களை அளித்து சாந்தியை மீட்டுச் சென்றார்.
திருவாரூர் டிஎஸ்பி தினேஷ் குமார் தலைமையிலான பெண் காவலர்கள், வழிதெரியாமல் சாலையில் நின்றிருந்த மாற்றுத்திறனாளி பெண்மணிக்கு உதவிய பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Thiruvarur