முகப்பு /செய்தி /தமிழ்நாடு / திருவாரூரில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்த வழக்கறிஞர் கைது

திருவாரூரில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்த வழக்கறிஞர் கைது

சாராயம் காய்ச்சி விற்பனை செய்த வழக்கறிஞர் கைது.

சாராயம் காய்ச்சி விற்பனை செய்த வழக்கறிஞர் கைது.

திருவாரூரில் வீட்டில் சாராயம் காட்சிய வழக்கறிஞரை கைது செய்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

திருவாரூர் மாவட்டம் அரித்துவாரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் நீடாமங்கலம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், வழக்கறிஞர் ராஜ்குமார் அரித்துவாரமங்கலம் பகுதியில் தனியாக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, அதில் கள்ளச்சாராயம் காய்ச்சி தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

வலங்கைமான் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்த்தபொழுது, பத்துக்கும் மேற்பட்ட பேரல்களில் சாராயம் ஊறல் போட்டிருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. அதனையடுத்து, சாராயம் ஊறல் போட்டிருந்த பேரல்களைக் கைப்பற்றிய காவல்துறையினர் காட்டுப் பகுதியில் சென்று கள்ளச்சாராயத்தை கீழே ஊற்றினர். பின்னர், இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்த வலங்கைமான் காவல்துறையினர் வழக்கறிஞர் ராஜ்குமாரை கைது செய்தனர்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Also see:

First published:

Tags: Thiruvarur