தேர்தலால் நிறுத்தி வைக்கப்பட்ட பயிர் பாதிப்பு நிவாரண தொகையை உடனடியாக வழங்க கோரிக்கை விடுக்கும் திருவாரூர் விவசாயிகள்...

தேர்தலால் நிறுத்தி வைக்கப்பட்ட பயிர் பாதிப்பு நிவாரண தொகையை உடனடியாக வழங்க கோரிக்கை விடுக்கும் திருவாரூர் விவசாயிகள்...

தேர்தல் காரணத்தால் நிறுத்தி வைக்கப்பட்ட பயிர் பாதிப்பு நிவாரண தொகையை உடனடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேர்தல் காரணத்தால் நிறுத்தி வைக்கப்பட்ட பயிர் பாதிப்பு நிவாரண தொகையை உடனடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 • Share this:
  கடந்தாண்டு நிவர் மற்றும் புரெவி புயல் தாக்கத்தின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் மிக கனமழை பெய்து மிகப்பெரிய பயிர் சேதம் ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு அரசு இடுபொருள் மானியத் தொகையை விவசாயிகளுக்கு நிவாரணமாக வழங்கியது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் நேரத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் இரண்டு லட்சம் ஏக்கர் பரப்பளவு நெற்பயிர்கள் பருவம் தப்பிய தொடர் கனமழையின் காரணமாக மழை நீரில் மூழ்கி முளைத்தது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி இருந்தனர்.

  உடனடியாக கணக்கெடுப்பு நடத்தி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அப்போது விவசாயிகள் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் தமிழக அரசு வேளாண் துறை சார்பில் கணக்கெடுப்பு நடத்தி இரண்டு லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசு அறிவித்தது. அதற்கான நிவாரணமும் அறிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் அந்த நிவாரணத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

  மேலும் படிக்க... பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட 4.8 கோடி ரூபாய் பறிமுதல்...

  கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகளை தளர்வுபடுத்தி பயிர் பாதிப்பு ஏற்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரண தொகையை அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கவேண்டும். மேலும் தற்போது உளுந்து, பயிறு, பருத்தி போன்ற கோடை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளதால் பொருளாதார ரீதியாக இந்த நிவாரணத்தொகை உதவிகரமாக இருக்கும். எனவே அரசு உடனடியாக விவசாயிகளுக்கு நிவாரண தொகையை வழங்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  செய்தியாளர் : செந்தில்குமரன்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: