முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கனமழையால் திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழையால் திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்தது. இதையடுத்து அந்த மூன்று மாவட்டங்களிலும் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

  • 1-MIN READ
  • Last Updated :

கனமழை காரணமாக திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பருவமழை தொடங்கி உள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் அதிகாலை வரை விட்டு விட்டு மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.

இதனைத் தொடர்ந்து திருவாரூரிலும் நேற்று விடிய விடிய மழை பெய்தது. திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் 12 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது. இதில் அதிகபட்சமாக திருத்துறைப்பூண்டியில் 13 சென்டி மீட்டர் மழையும், திருவாரூரில் 8 சென்டி மீட்டர் மழையும், நன்னிலத்தில் 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. அதேபோல் நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும் விடிய விடிய கனமழை பெய்தது. இதையடுத்து இந்த மூன்று மாவட்டங்களிலும் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

Students, கோப்புப் படம்
திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை (கோப்புப் படம்)

மேலும் பருவமழையால் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Also see...

First published:

Tags: North East Monsoon, School Holiday, Thiruvarur